பொது தமிழ்
1. “மீமிசை ஞாயிறு” - இலக்கணக் குறிப்பறிக
அ) அடுக்குத் தொடர் ஆ) ஒருபொருட் பன்மொழி
இ) இரட்டைக் கிளவி ஈ) பன்மொழி ஒரு பொருள்
2. பொருத்துக:
அ) இளவேனிற்காலம் - 1. ஆனி, ஆடி
ஆ) முன்பனிக்காலம் - 2. சித்திரை, வைகாசி
இ) கார்காலம் - 3. மார்கழி, தை
ஈ) முதுவேனிற்காலம் - 4. ஆவணி, புரட்டாசி
1 2 3 4
அ. 3 1 2 4
ஆ) 2 3 4 1
இ) 2 1 4 3
ஈ) 3 4 2 1
3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
அ) திசையிலும் பதறியெத் சிதறியோ டுதலும்
ஆ) சிதறியோ டுதலும் பதறியெத் திசையிலும்
இ) திசையிலும் டுதலும் பதறியெத் திசையிலும்
ஈ) பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும்
4. சார்பெழுத்துகளின் வகைகள்
அ) பத்து ஆ) ஐந்து இ) பன்னிரெண்டு ஈ) எட்டு
5. “பலகை” என்பது
அ) தொடர்மொழி ஆ) தனிமொழி
இ) பொதுமொழி ஈ) கலப்புமொழி
6. “அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்” - எவ்வகை ஆகுபெயர் பெயர் தேர்க
அ) கொண்டு கூட்டுப்பொருள்கோள்
ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
இ) மொழிமாற்றுப் பொருள்கோள்
ஈ) தாப்பிசைப் பொருள்கோள்
7. யாப்பருங்கலம் எனும் இலக்கண நூலை எழுதியவர்
அ) அமிர்தசாகர் ஆ) தொல்காப்பியர்
இ) அகத்தியர் ஈ) குணசாகரர்
8. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - குறளின் அணியை தேர்க:
அ) இல் பொருள் உவமையணி ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி ஈ) ஏகதேச அணி
9. பொருத்துக:
அ) வைகறை - 1. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
ஆ) ஏற்பாடு - 2. காலை 10 மணி முதல் 2 மணி வரை
இ) யாமம் - 3. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஈ) நண்பகல் - 4. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
1 2 3 4
அ. 3 1 4 2
ஆ. 2 4 1 3
இ. 2 1 4 3
ஈ. 3 4 2 1
10. “என் மாமா வந்தது” சரியான வழு தேர்க:
அ) பால் வழு ஆ) கால வழு
இ) திணை வழு ஈ) வினா வழு
11. ஆயுத எழுத்தை .... எனவும் குறிப்பிடலாம்.
அ) உயிர் எழுத்து ஆ) அளபெடை எழுத்து
இ) தனிநிலை எழுத்து ஈ) மெய் எழுத்து
12. “படம்” பார்த்தான் - என்பது
அ) மரூஉ மொழி ஆ) கலப்பு மொழி
இ) தொடர்மொழி ஈ) தனிமொழி
13. ‘வற்றல்’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக.
அ) பொருட்பெயர் ஆ) காலப்பெயர்
இ) பண்புப்பெயர் ஈ) தொழிற்பெயர்
14. யாப்பருங்கலக் காரிகை தோன்றிய காலம்
அ) கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
ஆ) கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
இ) கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
ஈ) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
15. “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” - குறளின் அணியை தேர்க:
அ) உருவக அணி ஆ) முற்றுருவகம்
இ) வேற்றுமை அணி ஈ) ஏகதேச உருவக அணி
16. “கோகிலா வந்தான்” சரியான வழு தேர்க:
அ) இட வழு ஆ) பால் வழு
இ) கால வழு ஈ) திணை வழு
17. உயிரளபடையில் செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய....
அ) மெய் எழுத்துக்கள் அளபெடுக்கும்
ஆ) உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும்
இ) உயிர் எழுத்துக்கள் அளபெடுக்கும்
ஈ) நெடில் அளபெடுக்கும்
18. பொருத்துக: அ) பாடாண்திணை - 1. பொருந்தாக் காமம்
ஆ) பொதுவியல் திணை - 2. பாடுதற்கு தகுதியுடையோரை போற்றி பாடுதல்
இ) கைக்கிளைத்திணை - 3. வெட்சி முதல் பாடாண் வரை- கூறாதவற்றை கூறல்
ஈ) பெருந்திணை - 4. ஒருதலைக் காமம்
1 2 3 4
அ. 3 1 2 4
ஆ. 2 3 4 1
இ. 2 1 4 3
ஈ. 3 4 1 2
19. பொருத்துக:
அ) வெட்சி - 1. நிரை மீட்டல்
ஆ) கரந்தை - 2. போர் மேற் செல்லல்
இ) வஞ்சி - 3. எதிர்த்துப் போரிடல்
ஈ) காஞ்சி - 4. நிரை கவர்தல்
1 2 3 4
அ. 4 1 2 3
ஆ. 2 4 3 1
இ. 2 1 4 3
ஈ. 3 4 1 2
20. ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துக்கள்
அ) முப்பத்திரண்டு ஆ) இருபத்திரண்டு
இ) நாற்பத்திரண்டு ஈ) ஐம்பத்திரண்டு
21. “படும்” என்னும் அசைச்சீர் வாய்ப்பாடு தேர்க:
அ) நாள் ஆ) காசு இ) மலர் ஈ) பிறப்பு
22. “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு”- இக்குறளில் பயின்று வரும் அணி தேர்க:
அ) வேற்றுப்பொருள் வைப்பணி ஆ) வேற்றுமை அணி
இ) நிரல் நிறை அணி ஈ) தற்குறிப்பேற்ற அணி
23. இளமை மரபுச் சொற்களை பொருத்துக
அ) அவரை - 1. குரும்பை ஆ) வாழை - 2. வடு
இ) தென்னங் - 3. பிஞ்சு ஈ) மா - 4. கச்சல்
1 2 3 4
அ. 3 1 2 4
ஆ. 2 4 3 1
இ. 2 1 4 3
ஆ. 2 3 4 1
ஈ. 3 4 1 2
24. “நாய் கத்தும்” - சரியான வழு தேர்க:
அ) மரபு வழு ஆ) கால வழு இ) திணை வழு ஈ) பால் வழு
25. கெடுப்பதூஉம் என்ற சொல்..
அ) சொல்லிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை
இ) ஒற்றளபெடை ஈ) செய்யுள் இசை அளபெடை
26. “தில், மன், பிற” - என்பன ... பகாப்பதம் ஆகும்.
அ) இடைப் பகாப்பதம் ஆ) வினைப் பகாப்பதம்
இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) உரிப் பகாப்பதம்
27. “நேர்+நிரை” என்பது
அ) கருவிளம் ஆ) புளிமா இ) தேமா ஈ) கூவிளம்
28. பொருத்துக
அ) நொச்சித்திணை - 1. வெற்றி பெற்ற மன்னனை புகழ்தல்
ஆ) உழிஞைத்திணை - 2. பகைவீரர் இருவரும் வெற்றி நோக்கிக் போகுதல்
இ) தும்பைத்திணை - 3. தன் மதிலை காத்தல்
ஈ) வாகைத்திணை - 4. வேற்று அரசன் மதிலை கைப்பற்றுதல்
1 2 3 4
அ. 3 1 2 4
ஆ. 2 4 3 1
இ. 2 1 4 3
ஈ. 3 4 2 1
29. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” - எவ்வகை பொருள்கோள் தேர்க
அ) நிரல் நிறைப் பொருள்கோள்
ஆ) விற்பூட்டுப் பொருள்கோள்
இ) தார்பிசைப் பொருள்கோள்
ஈ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
30. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது”- குறளின் அணியை தேர்க:
அ) தற்குறிப்பேற்ற அணி ஆ) வேற்றுமை அணி
இ) வேற்றுப்பொருள் வைப்பணி ஈ) நிரல் நிரையணி
31. “முன்றில்” - எவ்வகை இலக்கணம் சார்ந்தது
அ) இலக்கணப்போலி ஆ) இலக்கிய வழக்கு
இ) மரூஉ ஈ) இலக்கணமற்றது.
32. “நடிகன்”- பெயர்ச்சொல்லின் வகையறிக.
அ.தொழிற் பெயர் ஆ.பண்புப் பெயர்
இ.காலப் பெயர் ஈ.குணப் பெயர்
33. “தளை” எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து ஆ) நான்கு இ) ஏழு ஈ) எட்டு
34. “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி‘வாரல்’ என் பனபோல் மறுத்துக்கை காட்ட - இச் சிலப்பதிகார அடிகளில் பயின்று வரும் அணி தேர்க:
அ) நிரல் நிறையணி ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ) வேற்று பொருள் வைப்பணி.
35. “புதுவை” என்ற சொல்லின் இலக்கணம் அறிக
அ) இலக்கிய வழக்கு ஆ) மரூஉ
இ) இலக்கணமற்றது ஈ) இலக்கணப்போலி
36. பொருத்துக:
அ) குருவி - 1. குட்டி
ஆ) ஆடு - 2. கன்று
இ) எருமை - 3. குருளை
ஈ) சிங்கம் - 4. குஞ்சு
1 2 3 4
அ. 4 1 2 3
ஆ. 2 4 3 1
இ. 2 1 4 3
ஈ. 3 4 2 1
37. காணு, உருமு என்பன…..
அ) முற்றியலுகரங்கள் ஆ) குற்றியலிகரங்கள்
இ) குற்றியலுகரங்கள் ஈ) குற்றியலகரங்கள்
38. “து” என்னும் விகுதி எழுத்து குறிப்பது
அ) பலர் பால் விகுதி ஆ) ஒன்றன் பால் விகுதி
இ) பலவின் பால் விகுதி ஈ) ஆண்பால் விகுதி
39. வெண்சீர் வெண்டளை - வாய்ப்பாடு தேர்க:
அ) காய் முன் நேர் ஆ) கனி முன் நிரை
இ) காய் முன் நிரை ஈ) கனி முன் நேர்
40. “தேவர் அனையர் கயவர்; அவருந் தாம் மேவன செய்தொழுக லான்”- குறளின் அணியை தேர்க:
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) இல்பொருள் உவமை அணி
இ) வஞ்சகப் புகழ்ச்சி அணி
ஈ) பிறிது மொழிதல் அணி
41. “பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்றழைப்பது
அ) மங்கல வழக்கு ஆ) இடக்கரடக்கல்
இ) குழூஉக்குறி ஈ) இலக்கிய வழக்கு.
42. முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வருவது…
அ) ஔகாரக் குறுக்கம் ஆ) மகரக்குறுக்கம்
இ) ஐகாரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம்
43. நிகழ்கால இடைநிலை தேர்க
அ) த், ட் ஆ) கிறு, ஆநின்று இ) ப், வ் ஈ) அன், அல்
44. ஒன்றிய வஞ்சித்தளை - வாய்ப்பாடு தேர்க
அ) மாமுன் நிரை ஆ) கனி முன் நிரை
இ) காய் முன் நிரை ஈ) கனி முன் நேர்
45. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” - குறளின் அணியை தேர்க:
அ) ஏகதேச உருவக அணி
ஆ) இல்பொருள் உவமை அணி
இ) தற்குறிப்பேற்றணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
46. “பருப்பு உள்ளதா?” என வணிகரிடம் வினவும் வினா…
அ) ஐயவினா ஆ) கொளல் வினா
இ) அறியா வினா ஈ) கொடை வினா
47. “வரும் வண்டி” என்பதில் அடிக்கோடிட்ட சொல் லுக்கான இலக்கணக் குறிப்புத் தேர்க.
அ) ஐகாரக்குறுக்கம் ஆ) மகரக்குறுக்கம்
இ) ஔகாரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம்
48. “சாரியை” என்பது
அ) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது
ஆ) பகுதிக்கும் சந்திக்கும் இடையில் வருவது
இ) சந்திக்கும் விகுதிக்கும் இடையில் வருவது
ஈ) இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது
49. “இயைபுத் தொடை” என்பது
அ) மூன்றாம் சீர் ஒன்றி வருவது
ஆ) இறுதிச்சீர் ஒன்றி வருவது
இ) இரண்டாம் சீர் ஒன்றி வருவது
ஈ) முதற் சீர் ஒன்றி வருவது
50. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”- குறளின் அணியைத் தேர்க:
அ) பொருள் பின்வரு நிலையணி
ஆ) சொற்பொருள் பின்வரு நிலையணி
இ) சொல் பின்வரு நிலையணி
ஈ) பிறிது மொழிதல் அணி.
விடைகள்: 1. ஆ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. இ, 6. இ, 7. அ, 8. இ, 9. அ, 10. இ, 11. இ, 12. இ, 13. ஈ, 14. ஈ, 15. ஈ, 16. ஆ, 17. ஆ, 18. ஆ, 19. அ, 20. இ, 21. இ, 22. ஆ, 23. ஈ, 24. அ, 25. ஆ, 26. அ, 27. ஈ, 28. ஈ, 29. அ, 30. ஈ, 31. அ, 32. அ, 33. இ, 34. ஆ, 35. ஆ, 36. அ, 37. அ, 38. ஆ, 39. அ, 40. இ, 41. இ, 42. இ, 43. ஆ, 44. ஆ, 45. ஈ, 46. ஆ, 47. ஆ, 48. ஈ, 49. ஆ, 50. இ.
ச.வீரபாபு இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, சென்னை.