இணைப்பிதழ்கள்

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 37: பொது தமிழ்

செய்திப்பிரிவு

பொது தமிழ்

51. சுந்தர காண்டம் எத்தனையாவது காண்டம்?

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

52. மணிமேகலை முதன்முதலில் அட்சய பாத்திரம் யாரிடம் இருந்ததாக எண்ணி .... நாடு செல்கிறாள்

அ) புத்திர நாடு ஆ) சோழ நாடு

இ) மணிபல்லவ நாடு ஈ) சேர நாடு

53. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்” என்றவர்

அ) திரு.வி.க. ஆ) மு.வரதராசனார்

இ) தெ.பொ.மீ. ஈ) கவிஞர் வெ. ராமலிங்கனார்

54. மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்

அ) திரு.வி.க ஆ) மறைமலையடிகள்

இ) சுந்தரர் ஈ) அப்பர்

55. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் யார்?

அ) சுதமதி ஆ) சாதுவன்

இ) காய சண்டிகை ஈ) ஆபுத்திரன்

56. சரியான கூற்றுகளை ஆய்க

1. சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர் சீவகன்

2. சீவகசிந்தாமணிக்கு உரை கண்டவர் இளம்பூரணர்

3. சீவகசிந்தாமணியில் பயின்று வரும் பாவினம் விருத்தம்

4. வார்புரி நரம்பு கொண்டான் நபுலன்

அ) 1, 2 சரி ஆ) 3, 4 சரி இ) 1, 3 சரி ஈ) 2, 4 சரி

57. பரிதிமாற்கலைஞருக்கு திராவிட சாஸ்திரி

எனும் பட்டத்தை வழங்கியவர்

அ) கால்டுவெல் ஆ) தாமோதரன்

இ) பெரியார் ஈ) பாரதியார்

58. “திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டர்க்கோ உரியதன்று, உலகுக்கு பொது” - என்றவர்

அ) கி.ஆ.பெ.விசுவநாதன் ஆ) திரு.வி.க.

இ) கவியரசு வைரமுத்து ஈ) ம.பொ.சிவஞானம்

59. சரியானவற்றைத் தேர்வு செய்க.

1) லிட்டன் பிரபு எழுதிய “இரகசிய வழி” எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது மனோன்

மணியம் ஆகும்.

2) மனோன்மணியம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சரித்திர கதை இல்லை.

3) மனோன்மணியம் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்ட நூல்

அ) 1, 2 சரி ஆ) 2, 3 சரி இ) 1, 3 சரி ஈ) 3ம் சரி

60. உலகின் எட்டாவது அதிசயம் என்று பாராட்டப்படுவர்

அ) ஆங்சாங்சுகி ஆ) மேரிகியூரி

இ) கெலன் கெல்லர் ஈ) சடகோ சசாகி

61. 1. இன்னா நாற்பது - அ) பூதஞ்சேந்தனார்

2. இனியவை நாற்பது - ஆ) கபிலர்

3. களவழி நாற்பது - இ) பொய்கையார்

4. கார் நாற்பது - ஈ) கண்ணன் கூத்தனார்

1 2 3 4

அ) அ இ ஆ ஈ

ஆ) இ அ ஈ ஆ

இ) ஆ அ இ ஈ

ஈ) ஈ இ ஆ அ

62. ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றது

அ) பாரத தேசம் ஆ) காந்தி தேசம்

இ) நம் தேசம் ஈ) தூர தேசம்

63. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்றவர்

அ) பெரியார் ஆ) அம்பேத்கர்

இ) ஔவையார் ஈ) பாரதியார்

64. வள்ளலார் பதிப்பித்த நூல் அல்லாதது எது?

அ) ஆசிய ஜோதி ஆ) சின்மய தீபிகை

இ) ஒழிவிலொடுக்கம் ஈ) தொண்டைமண்டல சதகம்

65. “கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” எனும் பாடலடி இடம் பெற்ற நூல் எது?

அ)சிலப்பதிகாரம் ஆ)மகாபாரதம்

இ)நளவெண்பா ஈ)கம்பராமாயணம்

66. அம்மானை, ஊசல், நீராடல் அமைத்துப் பாடுவது

அ) ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

ஆ) பெண்பாற் பிள்ளைத்தமிழ்

இ) பொதுப்பருவம்

ஈ) பிள்ளைப் பருவத்தமிழ்

67. ‘உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்’ இத்தொடரால் அறியப்படுவர்?

அ) முடியரசன் ஆ) சுரதா

இ) மேத்தா ஈ) பாரதிதாசன்

68. “வீறுடை செம்மொழி தமிழ்மொழி” – என்ற கவிஞர்

அ) பாரதிதாசன் ஆ) பெருஞ்சித்திரனார்

இ) பெரியார் ஈ) கம்பர்

69. “நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை” என்றவர்

அ) அம்புஜத்தம்மாள் ஆ) அஞ்சலையம்மாள்

இ) ராணி மங்கம்மாள் ஈ) ஜான்சி ராணி

70. கடலூர் அஞ்சலை அம்மாளைத் “தென்னாட்டின் ஜான்சிராணி” என்றவர்

அ) மகாத்மா காந்தியடிகள் ஆ) அறிஞர் அண்ணா

இ) கர்மவீரர் காமராசர் ஈ) மகாகவி பாரதியார்

71. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள்

1) முத்துலட்சுமி ரெட்டி

2) தில்லையாடி வள்ளியம்மை

3) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

4) கடலூர் அஞ்சலையம்மாள்

அ) 1, 2 சரி ஆ) 3, 4 சரி

இ)1, 3, 4 சரி ஈ) அனைத்தும் சரி

72. முடியரசனுக்கு கவியரசு என்ற பட்டம் வழங்கப்பட்ட இடம்

அ). பாரிமலை ஆ) பொதிகை மலை

இ) பறம்பு மலை ஈ) அகஸ்தியர் மலை

73. திரு.வி.க.வுக்கு வாய்த்த மொழிநடை தமிழுலகில் மலைபோல் ஓங்கி உயர்ந்துள்ளது என்றவர்

அ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

ஆ) பரிதிமாற் கலைஞர்

இ) அண்ணல் அம்பேத்கர்

ஈ) பேரறிஞர் அண்ணா

74. A. இன்ப இலக்கியம் - 1. புலமைப்பித்தன்

B. இளைஞர் இலக்கியம் - 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

C. அழகின் வெள்ளம் - 3. வாணிதாசன்

D. கனவுப் பூக்கள் - 4. பாரதிதாசன்

E. புரட்சிப் பூக்கள் - 5. வா.மு. சேதுராமன்

A B C D E

அ) 3 4 5 2 1

ஆ 4 3 5 2 1

இ) 3 4 5 1 2

ஈ) 2 3 4 5 1

75. “உலகில் பிறந்தோர் அனைவரும் மூப்பினாலும் பிணியினாலும் ஒருநாள் இறந்துபோவர் என்பது இயற்கையே” என்றவர்

அ) அரசமாதேவி ஆ) மணிமேகலை

இ) அறவண அடிகள் ஈ) கவுந்தியடிகள்

76. யவணர்கள், பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள் என்ற செய்தியை சுட்டிக்காட்டும் சங்க இலக்கியம்

அ) மதுரைக்காஞ்சி ஆ) பட்டினப்பாலை

இ) சிறுபாணாற்றுப்படை ஈ) அகநானூறு

77. அயல்நாட்டு, உள்நாட்டு வணிகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் நூல்.

அ) தொல்காப்பியம் ஆ) பட்டினப்பாலை

இ) பெரியபுராணம் ஈ) பள்ளு இலக்கியங்கள்

78. சிறந்த பத்தை தன்னகத்தே கொண்ட நூல்?

அ) திருமந்திரம் ஆ) ராமாயணம்

இ) முதுமொழிக்காஞ்சி ஈ) திருக்குறள்

79. வான்வெளிப் பயணத்தைப் பற்றிக் கூறாத நூல் இணை.

அ) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

ஆ சீவகசிந்தாமணியும், கம்பராமாயணமும்

இ) பெருங்கதையும், கம்பராமாயணமும்

ஈ) பெருங்கதையும், திருக்குறளும்

80. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்களில் எது தவறானது?

அ) தமிழ் முதல் காப்பியம் ஆ) பத்தினிக் காப்பியம்

இ) பண்டையக் காப்பியம் ஈ) குடிமக்கள் காப்பியம்

81. “தேவா நின்கழல் நாயடியேன்” இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?

அ) சிலப்பதிகாரம் ஆ) பெரியபுராணம்

இ) கம்பராமாயணம் ஈ) திருவிளையாடல்

82. நற்றிணையில் உள்ள மொத்தப் பாடல்கள்

அ) 200 ஆ) 500 இ) 400 ஈ) 401

83. பாஞ்சாலி சபதத்தின் சிறப்புகளுள் ஒன்று

அ) எளிய சந்தம் ஆ) எளிய காவியம்

இ) எளிய சொற்கட்டு ஈ) எளிய உவமைகள்

84. “ஒன்று கொலாம்” - என பதிகம் பாடியவர் யார்?

அ) அப்பூதியடிகள் ஆ) மாணிக்கவாசகர்

இ) நாவுக்கரசர் ஈ) ஞானசம்பந்தர்

85. தொல்காப்பியர் கால எகர, ஒகரங்களின் புள்ளிகளை நீக்கி, நெட்டெழுத்துக்களை ஏகார, ஓகாரமாகச் சீர்திருத்தியவர்

அ) நன்னூலார் ஆ) வீரமாமுனிவர்

இ) சீகன்பால்கு ஐயர் ஈ) தந்தை பெரியார்

86. ‘திவ்விய கவி’ என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆ) பாரதிதாசன்

இ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஈ) ஒட்டக்கூத்தர்

87. தேன்மழை என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?

அ) சுரதாவினுடையது ஆ) கண்ணதாசனுடையது

இ) கவிமணியுடையது ஈ) வாணிதாசனுடையது

88. பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் யார்?

அ) முடியரசன் ஆ) சுரதா

இ) வாணிதாசன் ஈ) நாமக்கல் கவிஞர்

89. துணிபுரை (A): திராவிட மொழிகளுக்கெனச் சில சிறப்பியல்புகள் உள்ளன.

காரணம் (R): பத்து உயிரொலியன்களையும், பதினாறு மெய்யொலியன்களையும் திராவிட மொழிகள் பெற்றுள்ளன.

அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)வுக்கு சரியான விளக்கம்.

ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)வுக்கு சரியான விளக்கமல்ல.

இ) (A) சரி ஆனால் (R) தவறு.

ஈ) (A) தவறு ஆனால் (R) சரி.

90. “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக” - எனப் பாடியவர்

அ) வள்ளலார் ஆ) பாரதியார்

இ) பெருந்தேவனார் ஈ) பாரதிதாசனார்

91. முதன் முதலில் பிரபந்தம் 96 என குறிப்பிட்டவர்.

அ) வள்ளுவர் ஆ) பாரதி

இ) வீரமாமுனிவர் ஈ) யாருமில்லை

92. பெண்களின் கருப்பைச் சார்ந்த நோய்களை இம்மூலிகை நீக்குவதால் இதற்குக் குமரி என்ற பெயருண்டு. அம்மூலிகை எது?

அ) குப்பைமேனி ஆ) துளசி

இ) கீழாநெல்லி ஈ) சோற்றுக் கற்றாழை

93. தென்றலது சென்றதற்கு சுவடு ஏது என்று எழுதியவர்

அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன்

இ) கண்ணதாசன் ஈ) சுரதா

விடைகள்:, 51. ஈ, 52. அ, 53. அ, 54. அ, 55. இ, 56. இ, 57. ஆ, 58. ஆ, 59. இ, 60. இ, 61. இ, 62. அ 63. இ, 64. அ, 65. ஈ, 66. ஆ, 67. ஈ, 68. ஆ, 69. இ 70. அ, 71. ஈ, 72. இ, 73. அ, 74. அ, 75. இ, 76. ஈ 77. ஆ, 78. இ, 79. ஈ, 80. இ, 81. இ, 82. இ, 83. அ 84. இ, 85. ஆ, 86. அ, 87. அ, 88. ஆ, 89. அ, 90. அ 91. இ, 92. ஈ, 93. இ,

ச.வீரபாபு இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, சென்னை.

SCROLL FOR NEXT