புவியியல்
76. இந்தியாவுடன் மிக நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு
a) வங்கதேசம் b) சீனா
c) பாகிஸ்தான் d) நேபாளம்
77. எந்த நீர்சந்தி சீனாவுக்கும், ஜப்பானுக் கும் சாதகமான வணிகம், வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கை களுக்கு காரணமாக உள்ளது?
a) சூயஸ் கால்வாய்
b) ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
c) பாக் நீர்ச்சந்தி
d) மலாக்கா நீர்ச்சந்தி
78. பின்வருகின்ற பகுதிகளில் எது/எவை இந்தியாவில் மிக அதிக மழை பெறும் பகுதி?
a) கொங்கன் கடற்கரை
b) மலபார் கடற்கரை
c) ஷில்லாங் பீடபூமி
d) உட்கல் சமவெளி
79. கொடுக்கப்பட்டவற்றை கவனி :
i) லடாக் ii) டேராடூன்
iii) மேற்கு ராஜஸ்தான் iv) தெற்கு பஞ்சாப்
மேலே கொடுக்கப்பட்டவைகளில் எது/ எவை இந்தியாவில் குறைவான மழை பெறும் பகுதி?
a) i மட்டும் b) ii மட்டும்
c) ii & iv மட்டும் d) i, iii & iv மட்டும்
80. பின்வருகின்ற கூற்றுகளை கவனி :
i) பெரும்பாலான இந்தியாவின் பகுதியில் அரிசி பிரதான உணவு கிடையாது.
ii) இந்தியாவில் நெல் பயிர் அதிக பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
iii) நெல் விளையும் வண்டல் மண் நைட்ரஜன் சத்துக் குறைவானது
iv) இந்தியா பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை சரியானது?
a) i மட்டும் b) ii & iv மட்டும்
c) i & iii மட்டும் d) ii, iii & iv மட்டும்
81. பின்வருகின்ற இந்தியப் பகுதிகளுள் பசுமை மாறாக் காடுகள் கொண்ட பகுதி எது?
i) அஸ்ஸாம்
ii) அந்தமான், நிகோபார்
iii) ஒடிசா
iv) இமயமலையின் உயரமான சரிவுகள்
குறியீடு: a) i & ii மட்டும்
b) i, ii & iv மட்டும்
c) i & iv மட்டும்
d) i, ii & iii மட்டும்
82. கொடுக்கப்பட்டவற்றை கவனி :
கூற்று (A) : வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் சூரியனின் ஒளி தரைபரப்பின் மீது வந்தடைவதில்லை.
காரணம் (R) : வெப்பமண்டல பசுமை மாறாகாடுகள் மிகவும் அடர்வாகவும் & உயரமாகவும் இருக்கும்.
a) A சரி ஆனால் R தவறு
b) A தவறு ஆனால் R சரி
c) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது Aக்கு சரியான விளக்கம் ஆகும்.
d) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது Aக்கு சரியான விளக்கம் அல்ல.
83. பின்வருவனவற்றில் எது/எவை சில இந்திய மாநிலங்களில் குறைந்த சதவீத காடுகள் பரப்பு கொண்டிருப் பதற்கான காரணிகள் அல்ல?
i) மக்கள் தொகை வளர்ச்சி
ii) வேளாண் நிலம் அதிகரித்தல்
iii) நகரமயமாதல்
iv) தொழில்மயமாதல்
குறியீடு: a) i & iv மட்டும்
b) ii & iii மட்டும்
c) i, ii & iiv மட்டும்
d) மேற்கூறிய எதுவுமில்லை
84. பருவக்காடுகள் என்பது
a) வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்
b) வெப்பமண்டல இலையுதிர் காடு கள்
c) முட்புதர் காடுகள்
d) மாங்குரோவ் காடுகள்
85. கொடுக்கப்பட்ட கூற்றுகளில் தீபகற்ப ஆறுகள் பற்றிய சரியானவை எது?
i) இவை பருவ கால ஆறுகள்
ii) இவை போக்குவரத்துக்கு பயன்படுவ தில்லை
iii) அகன்ற பள்ளத்தாக்குகள் வழியே ஓடுகின்றன.
குறியீடு: a) i & ii மட்டும்
b) ii & iii மட்டும்
c) i & iii மட்டும் d) i, ii & iii
86. கொடுக்கப்பட்ட துணை நதிகளில் காவிரியின் வலது துணை நதிகளல்லாதது எது?
i) கபினி ii) பவானி
iii) நொய்யல் iv) அமராவதி
v) ஹேமாவதி
குறியீடு: a) i & v மட்டும்
b) ii, iii & iv மட்டும்
c) iii & v மட்டும்
d) v மட்டும்
87. காவிரி ஆறு தோற்றுவிக்காத தீவு எது?
a) காவிரி பூம்பட்டினம் தீவு
b) ஸ்ரீரங்கம் தீவு
c) சிவசமுத்திர தீவு
d) ஸ்ரீரங்கப்பட்டணம் தீவு
88. இந்தியாவின் முதல் நீர்மின் ஆற்றல் நிலையம் எது?
a) இடுக்கி
b) சிவசமுத்திரம்
c) பக்ராநங்கல்
d) தாமோதர்
89. பொருத்துக
(நீர்மின் நிலையம்) (மாநிலம்)
A) தெஹ்ரி - 1. ஆந்திர பிரதேசம்
B) ஸ்ரீசைலம் - 2. மணிப்பூர்
C) லோக்கடக் - 3. சிக்கிம்
D) டீஸ்டா - 4. உத்தரகாண்ட்
A B C D
a) 3 4 2 1
b) 4 3 1 2
c) 3 1 2 4
d) 4 1 2 3
90. பொருத்துக
(இன்றைய பெயர்) (வேதகாலப் பெயர்)
A) பியாஸ் - 1. பருஸ்னி
B) கோசி - 2. விடாஸா
C) ஜீலம் - 3. கௌசிகா
D) ராவி - 4. விபாஸா
A B C D
a) 4 3 1 2
b) 3 4 2 1
c) 4 3 2 1
d) 1 2 3 4
91. இந்திய தேசிய நீர்வழி ஆணையம் எத்தனை நீர் வழிகளை கண் டறிந்துள்ளது?
a) 5 b) 4 c) 3 d) 2
92. இந்தியாவில் எத்தனை கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன?
a) நான்கு b) ஆறு
a) கொங்கன் கடற்கரை
c) எட்டு d) பன்னிரெண்டு
93. இந்திய அரசுத் துறைமுகத் துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான விதிமுறை வழங்கியுள்ள சட்டம்?
a) இந்திய துறைமுகச் சட்டம் 1908
b) துறைமுகச் சட்டம் 1963
c) துறைமுகச் சட்டம் 2015
d) a & b இரண்டும்
94. எந்த ஆண்டு வான்வழிப் போக்கு வரத்து தேசியமயமாக்கப்பட்டது?
a)1932 b)1946 c)1953 d)1986
95. சென்னை பறக்கும் ரயில் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
a) 1, செப் 1990
b) 1, நவம்பர் 1995
c) 1, நவம்பர் 1998
d) 1, நவம்பர் 2000
96. இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?
a) புனே
b) பெங்களூரு
c) சென்னை
d) போபால்
97. இந்திய இரும்பு எஃகு குழுமம் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
a) 1907 b) 1919 c) 1959 d) 1972
98. பொருத்துக
A) பிலாய் எஃகு நிறுவனம் - 1. கப்பல் கட்டும் எஃகு
B) ரூர்கேலா எஃகு நிறுவனம் - 2. மின் எஃகு தகடுகள்
C) விஸ்வேரய்யா எஃகு நிறுவனம் - 3. உலோகக் கலவை
D) சேலம் எஃகு நிறுவனம் - 4. உலகத்தர துருப்பிடிக்காத இரும்பு
A B C D
a) 4 3 2 1
b) 3 4 2 1
c) 1 2 3 4
d) 2 4 3 1
99. தமிழகத்தில் மாலிப்டினம் கண்டு பிடிக்கப்பட்ட மாவட்டம் எது?
a) கிருஷ்ணகிரி b) தருமபுரி
c) சேலம் d) திருவண்ணாமலை
100. இந்தியாவில் மிகப்பெரிய மென் பொருள் ஏற்றுமதி நகரம் எது?
a) பெங்களூரு b) சென்னை
c) ஹைதராபாத் d) புனே
விடைகள்:
76.a 77.d 78.d 79.d 80.d 81.d 82.c 83.d 84.b 85.d 86.d 87.a 88.b 89.d 90.c 91.a 92.a 93.d 94.c 95.b 96.b 97.d 98.a 99.b 100.a
எஸ்.சிவகுமார்
நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை