இணைப்பிதழ்கள்

வெற்றி நூலகம்: ஒலிம்பிக் 1000 தகவல்கள்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு தனிநபரும் தனக்குள் இருக்கும் ஆற்றல், செயல்திறன், கலைத்திறன், அறிவாற்றல், குணாதிசயம் ஆகியவற்றை தானாகவே உந்தித்தள்ளி மெருகேற்ற முடியும் என்பதை உறுதியாகச் சொல்லும் புத்தகம்.

நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி – நெபோலியன் ஹில்
தமிழில்: புவனாபாலு
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.
போன் – 2433 2682 / 2433 8712

அரசாங்க வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொதுஅறிவு சம்பந்தப்பட்ட தகவல்களை ‘எது?’ ‘யார்?’ ‘எங்கே?’ ‘எப்போது?’ ஆகிய வெவ்வேறு தலைப்புகளின் கீழ் பிரித்து கேள்வி பதில்களாக எளிமையாக எடுத்துச்சொல்லும் நூல்.

போட்டித்தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு தகவல்கள்
நெல்லை கவிநேசன்
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.
போன் – 2435 3742/ 2431 2559

கல்வி, இலக்கியம், சேவை என்றால் நோபல் பரிசு, கலை என்றால் ஆஸ்கர் விருது அதுபோல விளையாட்டின் தலைசிறந்த பரிசு என்றால் ஒலிம்பிக் பதக்கம் என்றுதான் உடனடியாகச் சொல்லத் தோன்றும். அத்தகைய புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டி கிரேக்கத்தில் ஆரம்பமான கதை தொடங்கி, நவீன ஒலிம்பிக், முக்கிய சாதனைகள், ஒலிம்பிக் வீரர்கள், இந்திய ஒலிம்பிக் இப்படி ஒலிம்பிக் தொடர்பான 1000 தகவல்களை தொகுத்து கொடுத்திருக்கும் நூல்.

ஒலிம்பிக் 1000 தகவல்கள்
சா.அனந்தகுமார்
நிவேதிதா பதிப்பகம்
22/105, பாஸ்கர் காலனி, 3வ்து தெரு,
விருகம்பாக்கம், சென்னை – 600 092
போன்: 89393 87276 / 89393 87296

SCROLL FOR NEXT