ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மக்களின் மேன்மைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அரிய தலைவர்களை மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிய வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் எம்.ஏ.பழனியப்பன்.
நெருப்பில் வாடாத கருப்பு மலர் நெல்சன் மண்டேலா
எம்.ஏ.பழனியப்பன்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை- 600017
தொலைபேசி: 044-24331510
விலை: ரூ.150. பக்.240
சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக பின்தங்கிய சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள், கல்விக் கடன்கள் ஆகியவை பற்றி விரிவான தகவல்களைக் கொண்ட நூல் இது.
ஸ்காலர்சிப்
ந.குமரன்
போதி பதிப்பகம்
அம்மா பாளையம், திருப்பூர் 641652
தொலைபேசி: 97150-05009
விலை: ரூ. 250 பக்.304
மனிதத் தொடர்புகளை, செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் மனிதர்களை உளவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது. மனித மனத்தின் போக்கையும் அதன் குணங்களையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது பற்றியும் இதில் விரிவாக எடுத்துக்கூறியுள்ளார் ஆசிரியர் அருள்திரு.முனைவர் ம.அருள்.
என்னையே தேடும் நான்
அருள்திரு. முனைவர் ம.அருள்
வைகறை பதிப்பகம்,
திண்டுக்கல்-624001
தொலைபேசி: 0451-2430464
விலை: ரூ. 85. பக்.176