இணைப்பிதழ்கள்

வெற்றி நூலகம்: வெற்றிச் சிந்தனைகள்

செய்திப்பிரிவு

வாழ்வின் வெற்றிபெறுவதற்குத் தேவையான சிந்தனைகளை இந்நூலில் ஆசிரியர் அருள்நிதி ஆதவன் தந்துள்ளார். உலக அறிஞர்கள் பலருடைய மேற்கோள்களுடன் தனது சிந்தனைகளுக்கு வலுச் சேர்த்துள்ளார் அவர்.

வெற்றிச் சிந்தனைகள்
அருள்நிதி ஆதவன்
வெளியீடு
ஜோதி பதிப்பகம்
இராயனூர், கரூர்-639003

கைப்பேசி: 9994311315
பக். 64, விலை: ரூ.60

அண்மையில் மறைந்த சாதனையாளர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களைச் சிறு சிறு பத்திகளாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர். இதைப் படிக்கும்போது உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் எத்தகைய வெற்றியையும் பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம்
நெல்லை கவிநேசன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
தி.நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 2435 3742
பக். 96, விலை ரூ. 50

தனதுஅனுபவங்களின் வழியாகப் பிறரது நம்பிக்கை ஊற்றைத் திறக்கும் வேலையைச் செய்திருக்கிறார் நூலாசிரியர் ரைட்மந்த்ரா சுந்தர். எளிய கதைகளும் அனுபவச் சம்பவங்களும் நிறைந்த அத்தியாயங்கள் நூலை சுவாரசியமாக நகர்த்த உதவுகின்றன.

உன் வாழ்க்கை உன் கையில்
‘ரைட்மந்த்ரா’ சுந்தர்
வெளியீடு: ரைட்மந்த்ரா சோல் சொல்யூஷன்ஸ்
மேற்கு மாம்பலம்
சென்னை- 600 033
தொலைபேசி: 044-43536170
பக். 136, விலை ரூ. 125

SCROLL FOR NEXT