இணைப்பிதழ்கள்

ஆலோசனை: எல்லோரும் கணக்கில் 100-க்கு 100

ஏ.சி.பிரபு

கணக்கில் 100க்கு 100 வாங்க ஒரே ஒரு விஷயத்தைத் தெளிவாக தெரிந்துகொண்டால் போதும். அது 21-ம் நூற்றாண்டுக்கான கல்வி கற்கும் முறை. அதைத் தெரிந்துகொண்டால் அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 வாங்கலாம்.

மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கல்வியில் மாற்றம் தேவை.

பல்வேறு கல்வி ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் கற்றல்முறையை ஆராய்ந்துள்ளனர்.

ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான கற்றல் திறன் உள்ளது. அதன்படியே அவை கற்கின்றன. மனிதனும் அப்படியே.

கற்றல் வகைகள்

கற்றலின் முறைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

1.கேட்டல் (Hear/Audio)

2.பார்த்தல் (See/Visual)

3.செய்து பார்த்தல் (Do/Kinesthetic)

100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நடத்தும் பாடத்தை 20 சதவீதம் மாணவர்கள் கேட்டும், கரும்பலகையில் எழுதிப்போடுவதை 25 சதவீதம் பேர் கேட்டும், 30 சதவீதம் மாணவர்களால் அவர்களாகச் செய்துபார்த்தும்தான் புரிந்துகொள்வார்கள்.

என்ன செய்கிறோம்?

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? ஒரு மாணவனின் கற்கும் திறன் கேட்டல் முறையிலேயே இருந்தால் அந்த மாணவனைச் செய்து பார்க்க வைத்தும், பார்த்து கற்கும் முறைப்படியும் சொல்லிக்கொடுக்கிறோம். அதன் பிறகு, அந்த மாணவர்களுக்குப் படிப்பு வரவில்லை என்று குறையும் சொல்வோம்.

அந்த மாணவனின் கற்றல் முறை வேறு. நாம் சொல்லிக் கொடுத்த முறை வேறு.

உதாரணமாக, இட்லியைக் குழந்தைகளுக்கு பிசைந்து ஊட்டுவோம்.

அதேயே 5 வயதுக்கு மேலாகிவிட்டால் இட்லியைச் சின்னத் துண்டுகளாக்கி தருவோம்.

இதுபோல, அவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றபடி கல்வியைக் கொடுக்கும்போது அவர்கள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

90 சதவீதத்தினருக்குப் பார்ப்பது கேட்பது, செய்துபார்ப்பது என்ற அடிப்படையில்தான் மூளை கற்றுக்கொள்கிறது.

பார்ப்பது, கேட்பது, சொல்லிப்பார்ப்பது, செய்துபார்ப்பது என்ற முறைப்படி நாம் பயில ஆரம்பித்தால் நிச்சயம் சிறப்பாக எந்த ஒரு பாடத்தையும் பயில முடியும்.

கற்றலின் முறையால் பயன்

பள்ளி வகுப்பில் மாணவர்களை அமர வைக்கும்போதே அவரவர் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் அமர வைக்கலாம்.

இப்படிச் செய்யும்போது ஆசிரியர்கள் சிரமம் இல்லாமல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் வழிநடத்த முடியும்.

ஆசிரியர்களும்கூட ஒவ்வொரு விதமான கற்றல் திறனுடன்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றாற்போல் மாணவர்களை அமர வைக்கலாம். மாணவர்களின் கற்றல் முறை பற்றிய குறிப்பு பள்ளியில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் ஆசிரியர்கள் பணிமாறுதல் வாங்கிச் சென்றாலும் அடுத்து வருகிற புதிய ஆசிரியர்கள் மாணவர்களை பற்றி உடனே தெரிந்து கொள்ளமுடியும்.

மாணவர்களும் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும்போது அவரவர் கற்றல் திறன் சம்மந்தமான குறிப்பைப் பள்ளிகளில் கொடுத்தாலே போதுமானது. இத்தகைய அணுகு முறையால் நிச்சயம் கல்வியில் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

தொடர்புக்கு: prabuchandran55@gmail.com

SCROLL FOR NEXT