நட்சத்திரக் கணித மேதைகள்
பேராசிரியர் இரா.சிவராமன்
விலை: ரூ: 200
வெளியீடு: பை கணிதமன்றம்
சென்னை-94.
தொடர்புக்கு:9941914341
கணித மேதைகளையும் அவரது படைப்புகளையும் அறிமுகம் செய்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவசியமானது. கணித மேற்படிப்பு படிக்கவும் கணித ஆய்வு செய்வதற்கும் தூண்டுகோலாக இருக்கும். கணிதத்தின் மீது உள்ள அச்சத்தைப் போக்க உதவும். 50 கணித மேதைகளின் வாழ்வையும் சாதனையையும் பற்றிய தொகுப்பில் முதலாவது தொகுப்பு இது. உலகப் புகழ்பெற்ற கணிதச் சாதனைகளும் இதில் உள்ளன.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில செய்திகள்
எம்.சி.சிவசுப்பிரமணியன்
விலை: ரூ: 230
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை- 98. தொடர்புக்கு: 044-26241288.
இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்காலத் தொழில் தேக்கங்கள், பொருளாதார நெருக்கடிகள், விவசாயத் துறையின் நசிவு உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் பற்றிப் பேசுகிறது. அரசின் செயல்திட்டங்களைப் பற்றியும் விரிவாக அலசுகிறது. பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்.
பிளேட்டோ
எம்.ஏ. பழனியப்பன்
விலை: ரூ: 75
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை- 17
தொடர்புக்கு: 044-24331510
அரசியல் அமைப்பின் ஞானகுருவாகக் கருதப்படும் தத்துவ ஞானி பிளேட்டோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. கிரேக்க நாட்டின் தத்துவ ஞானி சாக்ரட்டீஸின் சிந்தனைகளால் கவரப்பட்டவர் பிளேட்டோ. பழங்காலத்திலேயே அந்த நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்தவர். அவரது வாழ்வு, தேடுதல், சாதனைகள் ஆகியவற்றைப் பேசும் நூல்.