இணைப்பிதழ்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 47

செய்திப்பிரிவு

இந்தியப் பொருளாதாரம்

1381. பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர்

A) நியோகி B) ரங்கராஜன் C) விஜய் கேல்கர் D) Y. V. ரெட்டி

1382. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ‘பெரும் பிரிவினை ஆண்டு’ என அழைக்கப்படுவது

A) 1911 B) 1921 C) 1951 D) 1971

1383. பின் தங்கிய நாடுகளின் சிறப்பியல் புகளை வகைப்படுத்தியவர்?

A) ஜோன் இராபின்சன் B) கெயின் கிராஸ் C) ஹார்வி லிபென்ஸ்டின் D) குரிஹாரா

1384. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (TNAU) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

A) 1971 B) 1981 C) 1982 D) 1984

1385. ‘JNNURM ’திட்டம் எதனோடு சம்பந்தப்பட்டது

A) கிராமங்களின் உள்கட்டமைப்பு B) நகரங்களின் உள் கட்டமைப்பு C) விவசாய சந்தை மேம்படுத்துதல் D) அதிக விளைவு தரக்கூடிய பயிர் வகைகளைப் பயிரிடும் திட்டம்

1386. நிகழ்வெண் பட்டியல் வழியாகத் தரப்படும் புள்ளி விவரங்கள்

A) தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் B) முதல் நிலைப் புள்ளி விவரங்கள் C) இரண்டாம் புள்ளி விவரங்கள் D) தொகுக்கப்படாத புள்ளி விவரங்கள்

1387. ஒரு நிறுமத்தின் கடனீட்டுப் பத்திரதாரர்கள் (Debenture-holders) என்பார், அதன்

A) கடனாளர்கள் B) கடன் வாடிக்கையாளர் C) உறுப்பினர்கள் D) இவற்றில் எதுவும் இல்லை

1388. பொருளாதாரத்தில் தலா வருமானம் கணக்கிடப்படுவது

A) மக்கள்தொகை/நாட்டு வருமானம் B)நாட்டு வருமானம்/மக்கள் தொகை C)நாட்டு வருமானம் - மக்கள் தொகை D) நாட்டு வருமானம் x மக்கள் தொகை

1389. இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ருபாய் நோட்டுகள்

A) கட்டளைப்பணம் B) குறுகிய பணம் C) பரந்துப்பட்ட பணம் D) இருப்புப் பணம்

1390. டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது

A) வரி சீர்திருத்தம் B) வங்கி சீர்திருத்தம் C) தொழில் அனுமதிக் கொள்கை D) வேளாண் விலைக் கொள்கை

1391. சரியானதை தேர்வு செய்க:

a.முதன்மை தொழில் - 1. காப்பீடு b.இரண்டாம் தொழில் - 2.கட்டுமானம் c.மூன்றாம் தொழில் - 3.சுரங்கம் குறியீடுகள்:

A) a-3, b-2, c-1 B) a-1, b-3, c-2 C) a-2, b-3, c-1 D) a-2, b-1, c-3

1392. கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர் அல்ல

A) பார்லி B) கோதுமை C) கடுகு D) சணல்

1393. இந்தியாவில் நாட்டு வருமானத்தை (National Income) கணக்கிடுவது

A) திட்டக்குழு B) நிதிக்குழு C) தேசிய புள்ளியியல் நிறுவனம் D) பாரத ரிசர்வ் வங்கி

1394. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ்கர் (SGSY) திட்டத்தோடு இணைக்கப்பட்ட திட்டங்கள்

I. IRDP II. DWCRA III. TRYSEM IV. NREP

A) I, II, IV மட்டும் B) I, III, IV மட்டும் C) I, II, III மட்டும் D) இவை அனைத்தும்

1395. 1944 பிரெட்டன் உட்ஸ் மாநாடு மூலம் உருவாக்கப்பட்டது/வை

A) உலக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி B) பன்னாட்டு நிதி நிறுவனம் C) உலக வாணிப நிறுவனம் D) A, Bஇரண்டும்

1396. வேளாண்மை விலைக்குழுவின் (Agricultural Prices Commission) புதிய பெயர்

A) கிராமிய வேளாண் விலை நிர்ணயக்குழு B) வேளாண் சந்தை மற்றும் நிர்வாக குழு C) வேளாண் செலவு மற்றும் விலைக்குழு

D) வேளாண் பொருட்கள் மதிப்பீட்டு மற்றும் நிர்வாக ஆணையம்

1397. நிலவள வங்கி அளிக்கும் கடன் வசதி

A) குறுகிய காலகடன்கள் B) மத்திய கால கடன்கள் C) நீண்ட கால கடன்கள் D) அனைத்து வகை கடன்கள்

1398. நீர்மை விருப்பகோட்பாட்டின் ஆசிரியர்

A) J.M. கீன்ஸ் B) மார்ஷல் C) சாமுவேல்சன் D) நைட்

1399. ‘ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு’என்ற உலக வாணிப கோட்பாட்டை வகுத்தளித்தவர்

A) மால்தஸ் B) சாமுவேல்சன் C) டேவிட் ரிக்கார்டோ D) ராபின்சன்

1400. ‘புனித வரிவிதிப்பு’ விதிகளை உருவாக்கியவர்

A) ஹாரி ஜான்சன் B) ஆடம் ஸ்மித் C) கிரவுத்தர் D) சாப்பிரேநா

1401. கீழ்க்கண்டவற்றுள் எது உலக வங்கி என அழைக்கப்படு கிறது?

A) IMF B) IBM C) IBRD D) ADB

1402. இந்திய உணவுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்

A) 1964 B) 1967 C) 1965 D) 1968

1403. கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

A) 1961 B) 1976 C) 1986 D) 1970

1404. மதிப்புக் கூட்டு வரியை (வாட்) அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்

A) சட்டீஸ்கர் B) ஹரியாணா

C) ஜார்க்கண்ட் D) மத்திய பிரதேசம்

1405. பொருத்துக:

A) மல்ஹோத்ரா குழு 1) பெட்ரோலியம்

B) சுந்தர்ராஜன் குழு 2) வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தொகை

C) சுரேஷ் டெண்டுல்கர் குழு 3) காப் பீட்டுத் துறை

D) ஜானகிராமன் குழு 4) வங்கித் துறையில் பாரிவர்த்தனை பாதுகாப்பு

A) A-4, B-3, C-2, D-1

B) A-2, B-1, C-4, D-3

C) A-1, B-2, C-3, D-4

D) A-3, B-1, C-2, D-4

1406. கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருமானம்?

A) GDP B) GNP C) NDP D) NNP

1407. எந்த ஐந்தாண்டு திட்டம், முதன்முறையாக 5 வருடங்கள் முடியும் முன்னர் முடிக்கப்பட்டது?

A) VI B) V C) IV D) III

விடைகள்:

1381. D

1382. B

1383. C

1384. A

1385. B

1386. A

1387. A

1388. B

1389. A

1390. A

1391. A

1392. D

1393. C

1394. C

1395. D

1396. C

1397. C

1398. A

1399. C

1400. B

1401. C

1402. C

1403. B

1404. B

1405. D

1406. D

1407. B

SCROLL FOR NEXT