தன்னம்பிக்கையையும், புதுமை உணர்வையும் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ள 20 தலைப்புகளில் பல விஷயங்களை விவாதிக்கிறது இந்த நூல்.
தனித்துவம் மிக்கவர்தான் சாதனையாளராக மாறுகிறார் என்று தொடங்குகிற விவாதம் நமது மனோபாவத்தை மாற்றினாலே நம்மால் வெற்றிபெற முடியும் என்றும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே அசை போடுங்கள், நமது குறையையும் நிறையாக மாற்றலாம் எனத் தொடர்கிறது.
தொடர்ந்து முன்னேறுவது இயற்கையின் விதி. அதோடு வெற்றிக்கான அடிப்படை விதிகளில் ஒன்றான நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். வெற்றியை உத்தரவாதப்படுத்த நாம் அடையப்போகும் வெற்றியை மனதில் ஒரு படமாக காண வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
சாதனை செய்ய உற்சாகப்படுத்தும் நூல்.
சாதிக்கப் பிறந்தவன் நீ
ஆசிரியர் – ச.சக்திவேல்
வெளியீடு-பரிவு அறக்கட்டளை
123, 2வது தளம், கவுடியா மடம் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
தொலைபேசி-044-42328887