ராணுவ வேலை
இந்திய ராணுவத்தில் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பணியில் 10 காலியிடங்கள் உள்ளன. எண்ட்ரி ஸ்கீம் அடிப்படை யில் இந்த வேலைக்குத் தேர்வு நடை பெறும். எல்.எல்.பி. பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ராணுவ வேலை என்பதால் திருமணம் ஆகாதவர்களே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 14.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.joinindianarmy.nic.in
பவர் கிரிட் வேலை
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனம். இந்நிறுவனத்தில் 15 டெபுடி மேனேஜர், 16 அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பி.காம். ஃபர்ஸ்ட் கிளாஸ் தேர்ச்சியுடன் சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யு.ஏ. படிப்பில் தேறியிருக்க வேண்டும். டெபுடி மேனேஜருக்கு 39 வயது, அக்கவுண்ட்ஸ் ஆபிசருக்கு 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.powergridindia.com
ரயில்வே வேலை
இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீஷியன் பணிகளில் காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு 1,666 காலியிடங்கள். இதில் உரிய பிரிவினருக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உண்டு. பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டிவி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் உள்ளிட்ட ஐ.டி.ஐ. படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வரை. தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.rrbchennai.gov.in