இணைப்பிதழ்கள்

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு 40 நாள் சிறப்புப் பயிற்சி: சிறப்பு தகுதித் தேர்வுக்கு தயாராக அரசு ஏற்பாடு

செய்திப்பிரிவு

சிறப்பு தகுதித் தேர்வு எழுதும் பார்வையற்ற ஆசிரியர்களுக்காக 40 நாள் சிறப்புப் பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்தப் பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வை நடத்த இருக்கிறது. இதற்கான வி்ண்ணப்பப் படிவங்கள் மார்ச் 5 முதல் 25-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளன.

652 பேர் பதிவு

சென்னை லேடி வெலிங்டன் கல்வியி யல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தில் இந்த சிறப்பு பயிற்சியை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குந எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தப் பயிற்சியில் சேர தமிழகம் முழுவதும் 652 பேர் பதிவு செய்துள் ளனர். சென்னையில் மட்டும் 230 பேர் சேர்ந்துள்ளனர். இதுவரை சேராதவர்களும் தங்கள் பெயரை பதிவுசெய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மார்ச் 1-ம் தேதி முதல் 40 நாட்களுக்கு தினமும் (ஞாயிறு தவிர) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒலிபெருக்கி வசதி

காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கும். இதில், ‘டயட்’ விரிவுரையாளர்கள், ஆசிரியர் கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்துவர். பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவு மற்றும் காபி, தேநீர் வழங்கப்படும். பாடத்தை உன்னிப்பாக கேட்க வசதியாக வகுப்புகளில் ஒலிபெருக்கி வசதி செய்யப்படும்.

கடைசி 3 நாட்களில் பார்வையற்ற ஆசிரியர்களுக்காக தேர்வெழுதும் உதவியாளர்களுக்கு (ஸ்கிரைப்) சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மாதிரி தகுதித் தேர்வும் நடத்த உள்ளோம். தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங் களை பயிற்சி மையத்திலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

இணை இயக்குநர்கள் எஸ்.உமா, தேவி ஆகியோர் பேசுகையில், ‘‘அரசு அளிக்கும் சிறப்புப் பயிற்சியை பார்வையற்ற ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப் பெண்ணுடன் தேர்ச்சி பெற வேண் டும்’’ என வாழ்த்தினர். முன்னதாக, டயட் முதல்வர் ஆர்.ஐயப்பன் வர வேற்றார். நிறைவாக, துணை முதல்வர் மணி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT