‘இந்து தமிழ் இயர்புக் 2019' போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்று தமிழில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான சரியான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
போட்டித் தேர்வுகளுக்குத் தேவைப்படும் தகவல்கள், செய்திகள் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகள் சார்ந்து சிறப்புக் கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருப்பது இந்த இயர்புக்கின் சிறப்பம்சம். இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் கலைச்சொல்லாக்கத்தோடு எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
டாக்டர் கு.கணேசன் எழுதியுள்ள மருத்துவம் தொடர்பான கட்டுரைகள், போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே பயன்படக்கூடியவை. அதேபோல், தேசிய அளவில் என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்த அடிப்படைத் தகவல்களைத் தொகுத்து அளித்துள்ள மூத்த இதழாளர் பொன்.தனசேகரனின் கட்டுரை பள்ளிக் கல்வி முடித்த மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும்.
சைபர் செக்யூரிட்டி, மருத்துவம், உயர்கல்வி ஆகிய இந்த மூன்று துறைகள் சார்ந்த கட்டுரைகள் இந்த இயர்புக்கின் கவனிக்கத்தக்க தனித் தன்மைகளாகத் திகழ்கின்றன.
- த. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 |