இந்தியாவின் மத்திய ஆட்சிப் பிரதேசங்களில் ஒன்றாக அந்தமான் தீவுகள் உள்ளன.அங்கே வசிக்கும் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் மொழிகளில் சில 70,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.
அந்தமானில் பேசப்படும் போ என்ற மொழி பேசும் கடைசி நபர் சில ஆண்டுளுக்கு முன்பாக இறந்துபோனதை அடுத்து அந்த மொழி அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது. முதல் அகராதி இந்த நிலையில் அவர்களால் பேசப்படும் மொழிகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள நான்கு மொழிகள் குறித்த முதல் அகராதியை பேராசிரியை அன்வித்தா அபி தொகுத்துள்ளார்.
இந்த நான்கு மொழிகளில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருப்பதாக இதுவரை பேசப்பட்டுவந்த மொழிக் குடும்பங்களோடு கூடுதலாக ஒரு மொழிக் குடும்பமும் இருப்பதாக விவாதம் கிளம்பி உள்ளது.
இந்த அகராதியில் இணைக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மிக விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள தகவல்கள் அறிவியலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய ஆய்வுக்காக இந்திய அரசு அவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்துள்ளது.இந்திய மொழிகளின் சொசைட்டி எனும் அமைப்புக்கும் அவர் தலைவராக உள்ளார்.அவரது ஆய்வால் அவருக்கு உலக அளவில் புகழ் ஏற்பட்டுள்ளது.பல நாடுகளின் பல்லைகழகங்கள் அவருக்கு கவுரவ பதவிகளை அளித்துள்ளன.