இணைப்பிதழ்கள்

வேலை வேண்டுமா?: 10 வகுப்பு படித்தவருக்கு கான்ஸ்டபிள் வேலை

செய்திப்பிரிவு

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் (சி.ஐ.எஸ்.எஃப்.) கான்ஸ்டபிள், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1203 காலி இடங்கள் நிரப்பப்படும். இதில் முன்னாள் ராணுவத்தினருக்கானவை 323 இடங்கள்.

வயது:

19.07.2014 அன்று 21 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கேற்ப வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் எனில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கிணையான படிப்பு அல்லது ராணுவத்தின் அல்லது கப்பற்படையின் அல்லது விமானப்படையின் முதல் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி:

விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக/போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம், கியர்கொண்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

மூன்றாண்டுகள் கனரக / போக்குவரத்து வாகனம் ஓட்டிய அல்லது இலகு ரக வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

அஸிஸ்டண்ட் கமாண்டன்ட் பெயரில் குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்தில் மாற்றத்தக்க ரூ. 50 மதிப்புள்ள போஸ்டல் ஆர்டர். எஸ்.சி., எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.cisf.gov.in/ என்னும் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து அஞ்சல் உறையின் மேலே "APPLICATION FOR THE POST OF CONSTABLE/ DRIVER IN CISF 2014” என்று எழுதிய பின்னரே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்திற்கும், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிக்கும், கூடுதல் விவரங்களுக்கும்: >http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_3_1415b.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2014. இந்தியாவின் வட கிழக்குப் பகுதியினருக்கு 09.08.2014.

SCROLL FOR NEXT