விளையாட்டு

முத்தரப்பு டி 20-ல் ஜிம்பாப்வே வெற்றி

செய்திப்பிரிவு

விண்ட்ஹோக்: நமீபி​யா​வின் விண்ட்​ஹோக் நகரில் முத்​தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஜிம்பாப்வே - நமீபியா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஜெர்​ஹார்டு எராஸ்மஸ் 48 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 88 ரன்​கள் விளாசினார்.

157 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 18.1 ஓவர்களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்​னசென்ட் கையா 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 72 ரன்​கள் விளாசி​னார். ஜிம்​பாப்வே அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.

SCROLL FOR NEXT