மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் மும்பை லீக் ஆட்டங்கள் பிராபோர்ன் மைதானத்துக்குப் பதிலாக வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் நடத்தப்படுகின்றன. 2-வது கட்ட ஆட்டங்கள் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் 2-வது கட்டத்தில் நடைபெற்ற 11 லீக் ஆட்டங்களும் பிராபோர்ன் மைதானத்துக்குப் பதிலாக வான்கடே மைதானத்தில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.