லொனேட்டோ (இத்தாலி): இத்தாலியில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கன் நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்றார்.
இத்தாலியின் லொனேட்டோ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் டிராப் பிரிவில் அதிக புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார் நீரு தண்டா. இதன்மூலம் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை சீசனின் ஷாட்கன் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நீரு தண்டா பெற்றார். பிரான்ஸ் வீராங்கனை கரோல் கார்மெனிர் வெள்ளியும், இத்தாலியின் எரிக்கா செஸ்ஸா வெண்கலமும் வென்றனர்.