விளையாட்டு

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து

உன்னதி ஹூடா, லக்‌ஷயா சென் தோல்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், அமெரிக்​கா​வின் கேரேட் டானுடன் மோதி​னார். இதில் லக்‌ஷயா சென் 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்​கில் இலங்​கை​யின் அபேவிக்​ர​மாவை வீழ்த்தி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்​கில் கனடா​வின் வென் யூ ஜாங்கை வீழ்த்தி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் கால் ​ப​தித்​தார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்​கில் போராடி கனடா​வின் மிட்​செல்லி லி-​யிடம் தோல்வி அடைந்​தார்.

ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறியது. இந்த ஜோடிக்கு முதல் சுற்​றில் ‘பை’ வழங்​கப்​பட்டு இருந்த நிலை​யில் நேற்று 2-வது சுற்​றில் ஸ்காட்​லாந்​தின் அலெக்​சாண்​டர் டன், ஆடம் பிரிங்​கிள் ஜோடியை எதிர்த்து விளை​யாட இருந்​தது.

ஆனால் அலெக்​சாண்​டர் டன்​னுக்கு வலது கணுக்​காலில் காயம் ஏற்​பட்​ட​தால் கடைசி நேரத்​தில் இந்த ஜோடி போட்​டி​யில் இருந்து வில​கியது. இதனால் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அடுத்த சுற்​றில் நுழைந்​தது.

கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் தனிஷா கிரஸ்​டோ, துருவ் கபிலா ஜோடி 21-11, 21-11 என்ற செட் கணக்​கில் மக்​காவ்​வின் லியோங் ஐயோக் சோங், இங் வெங் ஜோடியை வீழ்த்தி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறியது.

ஆடவர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் அர்​ஜூன், ஹரி​கரண் அம்​சகருணன் ஜோடி 17-21, 14-21 என்ற செட் கணக்​கில் கொரி​யா​வின் காங்​ மின்​ ஹியூக், கி டோங்​ ஜூ ஜோடி​யிடம்​ வீழ்​ந்​தது.

SCROLL FOR NEXT