விளையாட்டு

ஜூலை 11-ல் பெண்கள் கால்பந்து அணி தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு 2026-27-ம் ஆண்டுக்​கான சப்​-ஜூனியர் பெண்​களுக்​கான தேசிய கால்பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டியை வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை நடத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளது.

இதையொட்டி தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் நிர்​வாகக் குழு, சப்​-ஜூனியர் பெண்​களுக்​கான மாநில அணி வீராங்​க​னை​கள் தேர்வு மற்​றும் உண்டு உறை​விட பயிற்சி முகாம் தேர்வு வரும் 11 மற்​றும் 12-ம் தேதி​களில் திண்​டுக்​கல்​லில் உள்ள ரேடியன்ஸ் பப்ளிக் ஸ்கூல் மேல்​நிலைப் பள்​ளி​யில் நடத்த உள்​ளது.

இதில் பங்​கேற்​பவர்​கள் காலை 7 மணிக்கு மைதானத்​தில் இருக்க வேண்​டும். உண்டு உறை​விட பயிற்சி முகாம் வரும் 14-ம் தேதி முதல் ரேடியன்ஸ் பப்​ளிக் ஸ்கூல் மேல்​நிலைப் பள்​ளி​யில் நடைபெறும். இந்த முகா​முக்கு தேர்வு செய்​யப்​படு​வர்​களுக்கு பயிற்சியாளர் மூலம் முறைப்​படி​யான தகவல் தெரிவிக்​கப்​படும்.

இந்த தேர்​வில் கலந்து கொள்​பவர்​கள் 1.1.2013 அன்றோ அல்​லது அதற்​குப் பிறகோ மற்​றும் 31.12.2014 அன்றோ அல்​லது அதற்கு முன்போ பிறந்​திருக்க வேண்​டும். பிறப்பு சான்​றிதழ், ஆதார் ஆகிய​வற்​றின் அசல் கொண்​டுவர வேண்​டும். மேலும் தேர்வுக்கான சோதனை​களில் பங்​கேற்க வரு​வதற்கு முன்​ன​தாக, வீராங்கனை​கள் டிஜிலாக்​கர் சரி​பார்ப்பு செயல்​முறையை வெற்றிகர​மாக முடித்​திருக்​க வேண்​டும்​.

SCROLL FOR NEXT