விளையாட்டு

அரை இறுதியில் இந்திய மகளிர் அணி

செய்திப்பிரிவு

நிஷின்: ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க பேட்டர்களான அயகா கட்டோ ஸ்டாஃபோர்ட் 25 ரன்களும் ஹருனா இவாசாகி 10 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சரணி 4, ஷபாலி வர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

59 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். கமலினி 0, பார்தி ஃபுல்மாலி 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிச்சா கோஷ் 12 ரன்கள் சேர்த்தார். நாளை நடைபெறும் அரை இறுதியில் இந்திய மகளிர் அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT