விளையாட்டு

‘சுழல் வலை’யை விரிக்க காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா - தப்பிப்பாரா அபிஷேக் சர்மா?

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா ரன்​கள் சேர்க்க தடு​மாறி வரு​கிறார். டி20 தரவரிசை​யில் முதலிடத்​தில் இருக்​கும் அபிஷேக் சர்மா கடந்த 18 மாதங்​களாக தனது அதிரடி பேட்​டிங்​கால் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​திருந்​தார்.

ஸ்டிரைக் ரேட் 192+ வைத்​துள்ள அவர், பவர்​பிளே​வில் எதிரணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு கடும் நெருக்​கடி கொடுத்து வந்​தார். ஆனால், நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர், 3 ஆட்​டங்​களி​லும் டக் அவுட் ஆகி வெளியேறி​னார்.

          

அமெரிக்கா​வுக்கு எதி​ரான முதல் போட்​டி​யில் வேகப் பந்​து​வீச்​சாளர் அலி கான் பந்​து​வீச்​சில் முதல் பந்​திலேயே அவுட்டான அபிஷேக் சர்​மா, பாகிஸ்​தானுக்கு எதி​ரான போட்​டி​யில் சல்​மான் அலி ஆகா பந்​து​வீச்​சிலும், நெதர்லாந்​துக்கு எதி​ரான போட்​டி​யில் ஆர்​யன் தத் பந்​து​வீச்​சிலும் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டி​னார்.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இன்​னும் தனது ரன் கணக்கை தொடங்​காமலேயே உள்ளார். அவர் பார்​மின்றி தவித்​தா​லும் அது இந்​திய அணியில் பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்​லை. இது ஒரு புறம் இருக்க அபிஷேக் சர்​மாவை ஆட்​ட​மிழக்​கச் செய்​யும் உத்​தி​களை எதிரணி​கள் கண்​டு​பிடித்து விட்டனவா? அல்​லது சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக தொழில்நுட்ப ரீதி​யாக அபிஷேக் சர்மா தவறுகளை செய்கிறா​ரா? என்ற கேள்வி​கள் எழுந்​துள்​ளன.

டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் ஆட்​டத்​தில் பங்கேற்ற அபிஷேக் சர்மா அதன் பின்​னர் உடல்​நலக்​குறைவு காரண​மாக சில நாட்​கள் மருத்​து​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதனால் அவர், நமீபி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஆட்​டத்​தில் விளை​யாட​வில்​லை. மருத்​து​வ​மனை​யில் இருந்து திரும்பி வந்த அவர், பாகிஸ்​தான் மற்​றும் கனடா அணி​களுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விளை​யாடி​னார். ஆனால் இந்த இரு ஆட்​டங்​களி​லும் அபிஷேக் சர்​மா, ஆஃப் ஸ்பின்​னர்​களுக்கு எதி​ராக ஆட்​ட​மிழந்​தார்.

தற்​போது லீக் சுற்​றுகள் முடிவடைந்து சூப்​பர் 8 சுற்று தொடங்க உள்​ளது. சூப்​பர் 8 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நாளை (22-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவுக்கு எதி​ராக விளை​யாட உள்​ளது. தொடர்ந்து ஜிம்​பாப்​வே, மேற்கு இந்​தி​யத் தீவு​களை​யும் இந்​திய அணி எதிர்​கொள்​கிறது. அரை இறு​திக்கு முன்னேற வேண்​டு​மா​னால் இந்த சுற்​றில் இந்​திய அணி கணிச​மான வெற்​றிகளை குவித்​தாக வேண்​டும்.

நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான ஆட்​டங்​கள் என்​ப​தால் அபிஷேக் சர்மா மீதான அழுத்​தம் அதிகரிக்கக்கூடும். அவரது பேட்​டிங்​கில் பெரிய அளவிலான குறை​பா​டாக பார்க்​கப்​படு​வது பேட்​ஸ்​விங் ஆகும். அபிஷேக் சர்மா பொது​வாக மட்​டையை வலு​வாக சுழற்றி ரன்​கள் குவிக்​கும் திறன் கொண்​ட​வர். பெரும்​பாலான பந்​துகளை அவர், அதிக வலு​வுடன் அடித்து விளை​யாடு​கிறார்.

ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மந்​த​மான ஆடு​களங்​களில் எதிரணி​யினர் தொடக்​கத்​திலேயே சுழற்​பந்து வீச்சை பயன்​படுத்​துகின்​றனர். ஆடு​கள​மும் மந்​தம், பந்​தின் வேக​மும் எதிர்​பார்ப்​பதை விட குறை​வாக இருப்பதால் அபிஷேக்​கின் பேட்​ஸ்​விங் அதற்கு தகுந்​த​வாறு அமையாத​தால் விக்​கெட்டை விரை​வாக பறி​கொடுப்​ப​தாக​வும் கிரிக்​கெட் நிபுணர்​கள் கருதுகின்​றனர்.

இதற்​கிடையே கடந்த இரு ஆட்​டங்​களி​லும் அபிஷேக் சர்மா ஆட்​ட​மிழந்த விதத்தை கவனித்​துள்ள தென் ஆப்பிரிக்க அணி அதற்கு தகுந்​த​படி திட்​டங்​களை வகுக்க ஆயத்​த​மாகி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இந்த வகை​யில் தொடக்க ஓவர்​களை காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி ஆகியோரை கொண்டு வீசச் செய்​யாமல் எய்​டன் மார்க்​ரம் மற்​றும் இடதுகை சுழற்​பந்து வீச்​சாள​ரான ஜார்ஜ் லின்டே ஆகியோரை பயன்​படுத்​தக்​கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் தொடக்​கத்​திலேயே இந்​திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முடி​யும் என தென் ஆப்​பிரிக்க அணி நினைக்​கக்​கூடும். எனினும் கடந்த காலங்​களில் சுழற் பந்து வீச்​சுக்கு எதி​ராக அபிஷேக் சர்மா தடு​மாற்​றம் அடைய​வில்​லை. நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் வான்​கடே, கொழும்பு மற்​றும் அகம​தா​பாத் ஆடுகளங்களின் மெது​வான தன்​மையே அவரை செயலிழக்​கச் செய்​துள்​ளது.

ஐபிஎல் அணி​யின் பிரபல பேட்​டிங் பயிற்​சி​யாளர் ஒரு​வர் கூறும்​போது, “அபிஷேக் சர்​மா​வின் பேட்​டிங்கை எதிரணியினர் இன்​னும் புரிந்​து​கொள்​ள​வில்​லை. முதல் ஆட்​டத்​தில் அவர், டீப் எக்​ஸ்​டிரா கவர் திசை​யில் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அது மோச​மான பந்​து. அடுத்த இரு ஆட்​டங்​களி​லும் சுழற்​பந்து வீச்​சாளர்​களிடம் இருந்து வந்த பந்​துகள் ஒரே திசை​யில் சுழன்று வந்​தன. அதில் பெரி​தாக எது​வும் இல்​லை.

இந்த ஆட்​ட​மிழப்​பு​களுக்கு முன்​னர், ஆஃப்​-ஸ்​பின்​னர்​கள் அபிஷேக் சர்​மாவை தொடர்ந்து தொந்​தரவு செய்ததற்கான எந்த தரவும் இல்​லை. அவர் வழக்​க​மாக ஆஃப்​-ஸ்​பின் நன்​றாக விளை​யாடு​வார். அதில், அவரிடம் இருந்து எந்த குறையை​யும் பார்த்​தது இல்​லை” என்​றார். வேகப்​பந்து வீச்​சுக்கு ஏற்ற ஆடு​களங்​களில் அபிஷேக் சர்மா தனது பேட்​டிங் ஸ்விங்​கால் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தி உள்​ளார்.

தற்​போது ஆடு​களத்​தின் தன்மை காரண​மாகவே தடுமாற்றத்​துக்கு உள்​ளாகி உள்​ளார். அவரை போன்று மட்​டையை வீசக்​கூடிய பேட்​ஸ்​மேன்​களுக்கு வேகம் குறைந்த பவுன்​சர்​கள், கட்​டர்​கள், நக்​குல் பந்​துகள் பிரச்​சினையை ஏற்​படுத்​தக்​கூடும். அபிஷேக் சர்மா தனது சர்வதேச கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் தொடர்ச்​சி​யான சவால்​களை எதிர்​கொள்​வது இதுவே முதன்​முறை.

இந்த விஷ​யத்​தில் இந்​திய அணி​யின் பேட்​டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்​டக் தொழில் நுட்ப ரீதியாக​வும், மனரீ​தி​யாக​வும் அபிஷேக் சர்​மாவை பலப்​படுத்​து​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். இதை இறுகப்​பற்றி அபிஷேக் சர்மா மீண்​டும் ரன் வேட்​டைக்கு தன்னை தயார்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

அபிஷேக்கால் கவலையா?

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறும்போது, “அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து அணியில் விவாதிக்க வில்லை. அவர், உலகத்தரம் வாய்ந்த வீரர். அதிர்ஷ்டவசமாக அணியில் உள்ள மற்ற வீரர்கள் ரன்கள் குவித்து அவருக்கு உறுதுணையாக உள்ளனர். ஆனால் நாங்கள் இப்போது உலகக் கோப்பையின் மிக முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளோம். இதனால் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

‘அன்று சச்​சின்’

இந்​திய கிரிக்​கெட் ஜாம்​ப​வா​னான சச்​சின் டெண்​டுல்​கர் கடந்த 1994-ம் ஆண்டு நடை​பெற்ற சிங்​கர் கோப்​பைக்​கான முத்​தரப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். 4-வது ஆட்​டத்​தில் 8 ரன்​களில் நடையை கட்​டி​னார். ஆனால் 5-வது ஆட்​டத்​தில் நியூஸிலாந்​துக்கு எதி​ராக 115 ரன்​களை விளாசி மிரட்​டினர். அதன் பிறகு நிலைமை வி​யத்​தகு முறை​யில்​ மாறியது. இதே பாணி​யில்​ அபிஷேக்​ சர்​மா​வும்​ பார்​முக்​கு திரும்​புவதற்​கான வழியை கண்​டறியக்கூடும்.

SCROLL FOR NEXT