விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் 167 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 70 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.ஸாக் ஃபோக்ஸ் 4, ஜேக்கப் டஃபி 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்தது. ஸாக் ஃபோக்ஸ் 4 ரன்களில் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஓஜய் ஷீல்ட்ஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 75.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 56, டேக்நரைன் சந்தர்பால் 52 ரன்கள் சேர்த்தனர்.

ஜேக்கப் டஃபி 5, மேட் ஹென்றி 3, ஸாக் ஃபோக்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 64 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 14, டேவன் கான்வே 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT