விளையாட்டு

நியூஸிலாந்து உடனான 3-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணிக்கு 462 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

மவுண்ட் மவுங்கனு: நியூஸிலாந்​துக்கு எதி​ரான 3-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வெற்றி பெற 462 ரன்​கள் இலக்​காக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து டி20, ஒரு​நாள், டெஸ்ட் தொடர்​களில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி விளை​யாடி வருகிறது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா​வில் முடிந்த நிலை​யில் வெலிங்​டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில் 3-வது டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்​க​னு​வில் தொடங்​கியது. நியூஸிலாந்து முதல் இன்​னிங்​ஸில் 8 விக்​கெட் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 6 விக்​கெட் இழப்​புக்கு 381 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று 4-ம் நாள் ஆட்​டத்தை கவேம் ஹாட்ஜ் 109 ரன்களு​ட​னும், ஆன்​டர்​சன் பிலிப் 12 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். முதல் இன்​னிங்​ஸில் மேலும் 39 ரன்​கள் சேர்ப்​ப​தற்​குள் மேற்கு இந்தி​யத் தீவு​கள் அணி ஆட்​ட​மிழந்​தது. ஆன்​டர்​சன் பிலிப் 17 ரன்களும், ஷாய் ஹோப் 4 ரன்​களும், ஜெய்​டன் சீல்ஸ் 15 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர்.

128.2 ஓவர்​களில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 420 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கவேம் ஹாட்ஜ் மட்​டும் 123 ரன்​கள் குவித்து ஆட்டமிழக்​காமல் இருந்​தார். இதையடுத்து முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து 155 ரன்​கள் பெற்​றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 54 ஓவர்​களில் 2 விக்கெட் இழப்​புக்கு 306 ரன்​களைக் குவித்து டிக்​ளேர் செய்​தது.

முதல் இன்​னிங்​ஸில் இரட்​டைச் சதம் விளாசிய டேவிட் கான்வே 100 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் டாம் லேதம் 130 பந்​துகளில் 101 ரன்​களை விளாசி அவுட்​டா​னார். கேன் வில்​லி​யம்​சன் 40 ரன்​களும், ரச்​சின் ரவீந்​திரா 46 ரன்​களும் குவித்தனர். இதையடுத்து 462 ரன்​கள் குவித்​தால் வெற்றி என்ற இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தொடங்​கியது.

நேற்​றைய ஆட்​ட நேர இறு​தி​யில் அந்த அணி 16 ஓவர்​களில் விக்கெட் இழப்​பின்றி 43 ரன்​கள் எடுத்​துள்​ளது. ஜான் கேம்ப்​பெல் 2, பிரண்​டன் கிங் 37 ரன்​கள் குவித்து களத்​தில் உள்​ளனர். வெற்​றிக்கு இன்​னும் 419 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இன்​றைய கடைசி நாள் ஆட்​டத்தை மேற்கு இந்​தி​யத் தீவு​கள்​ அணி தொடர்ந்​து விளை​யாடவுள்​ளது.

SCROLL FOR NEXT