விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூஸிலாந்து @ 3-வது டெஸ்ட் போட்டி

செய்திப்பிரிவு

மவுண்ட் மவுங்கனி: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் 3-வது நாள் ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 381 ரன்​கள் குவித்​தது. கவேம் ஹாட்ஜ் சதம் விளாசி​னார்.

மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி முதல் இன்​னிங்​ஸில் 155 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக டேவன் கான்வே 227, டாம் லேதம் 137 ரன்​கள் விளாசினர்.

இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 23 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 110 ரன்​கள் எடுத்​தது. பிரண்​டன் கிங் 55 ரன்​களும், ஜாண் கேம்​பல் 45 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தொடர்ந்து விளை​யாடியது.

பிரண்​டன் கிங் 104 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேக்​கப் டஃபி பந்​தில் போல்​டா​னார். ஜாண் கேம்​பல் 45 ரன்​களில் வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய டெவின் இம்​லாக் 27, அலிக் அதானஸ் 45, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 43, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 2 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார்.

சீரான இடைவேளை​யில் விக்​கெட்​கள் சரிந்த போதி​லும் கவேம் ஹாட்ஜ் நிதான​மாக விளை​யாடி 224 பந்​துகளில், 13 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இது அவரது 2-வது சதமாக அமைந்​தது. 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 113 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 381 ரன்​கள் எடுத்​தது.

கவேம் ஹாட்ஜ் 109, ஆண்​டர்​சன் பிலிப் 12 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி, அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். மைக்​கேல் ரே, டேரில் மிட்​செல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 194 ரன்​கள் பின்​தங்​கிய உள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி கைவசம் 4 விக்​கெட்​கள் உள்ள நிலை​யில் இன்று 4-வது நாள் ஆட்​டத்​தை சந்தித்தது.

முதல் இன்னிங்ஸில் மேற்கொண்டு 39 ரன்கள் மட்டும் சேர்க்க அனுமதித்தனர் நியூஸிலாந்து அணி பவுலர்கள். ஆண்டர்சன் பிலிப், ஷாய் ஹோப், ஜேடன் சீல்ஸ், ரோச் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 420 ரன்களுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆல் அவுட் ஆனது.

155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை நியூஸிலாந்து அணி தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. கான்வே மற்றும் லேதம் சதம் விளாசினர். வில்லியம்சன் 40 மற்றும் ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் நியூஸிலாந்து கேப்டன் லேதம்.

இதையடுத்து 462 ரன்கள் இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விரட்டி வருகிறது. 4-ம் நாள் ஆட்ட முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நாளைய தினம் 419 ரன்கள் எடுத்தால் அந்த அணி வெற்றி பெறும்.

கான்வே சாதனை: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 10-வது வீரராக கான்வே இணைந்துள்ளார். அதே போல ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த நியூஸிலாந்து வீரர்களின் பட்டியலில் 327 ரன்கள் உடன் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 227, இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களை கான்வே பதிவு செய்தார். முதல் இடத்தில் பிளெமிங் 343 ரன்களும், இரண்டாம் இடத்தில் மார்ட்டின் குரோவ் 329 ரன்கள் உடன் உள்ளனர்.

SCROLL FOR NEXT