விளையாட்டு

“நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்கத்தா​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் லக்னோ அணி 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணி​யைத் தோற்கடித்​தது. 182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணி முகுல் சவுத்ரியின் அதிரடியால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இந்​நிலை​யில் இந்​தத் தோல்வி குறித்து கொல்​கத்தா அணி வீரர் ரோவ்​மன் பாவல் கூறிய​தாவது: லக்னோ அணியுடனான போட்டிநாங்​கள் வெல்​லக் கூடியதுதான். ஆனால் நடு​வர் செய்த பெரும் தவறால் நாங்​கள் தோல்வி அடைய நேரிட்​டது. எங்​கள் அணி​யின் தொடக்க வீர​ரான ஃபின் ஆலன் பேட்​டிங் செய்​த​போது பந்​தைத் தூக்கி அடித்தார். அதை தேர்ட் மேன் திசை​யில் இருந்த லக்னோ வீரர் திக்​வேஷ் ராதி பிடித்​தார்.

          

இந்த கேட்ச்​சில் சந்​தேகம் இருந்​த​தால் 3-வது நடு​வரிடம் கேட்​கப்​பட்​டது. ஆனால், நடு​வர் செய்த பெரும் தவறால் ஃபின் ஆலனுக்கு அவுட் கொடுக்​கப்​பட்​டது. இந்த விஷ​யத்​தில், பல கோணங்​களை பார்த்து ஆய்வு செய்து முடிவு எடுத்​திருக்க வேண்​டும். இந்த விஷ​யத்​தில் அப்​படி நடை​பெற​வில்​லை. இது பெரும் தவறு.

இந்​தத் தோல்​வி​யால் நாங்​கள் 2 புள்​ளி​களை இழந்​தோம்.ஐபிஎல் சாம்​பியன்​கள் பெரும்​பாலும் தொடரின் நடுப்​பகு​தி​யிலும் இறு​திக்​கட்​டத்​தி​லுமே வலுப்​பெறுகின்​றனர். எங்​களுக்கு இந்த சீசனில் தொடக்​கம் சரி​யாக அமைய​வில்​லை. இருப்​பினும் இந்​தப் தொடர் எங்​களுக்கு எப்​படி அமையப் போகிறது என்​கிற விதி இன்​னும் எங்​கள் கைகளி​லேயே உள்​ளது. இன்​னும் எங்​களுக்கு 10 ஆட்​டங்​கள் மீத​முள்​ளன. அதில் வெற்றி பெற்று மீண்டு வரு​வோம். இவ்​வாறு ரோவ்​மன்​ பாவல்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT