விளையாட்டு

IPL 2026: “நம் திறனை 120% வெளிப்படுத்த வேண்டும்” - ஆர்சிபி வீரர்களுக்கு கோலி அறிவுரை

வேட்டையன்

பெங்களூரு: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் 120 சதவீத செயல்திறனை நாம் வெளிப்படுத்த வேண்டுமென ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். வரும் 28-ம் தேதி அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. இந்த முறை நடப்பு சாம்பியனாக அந்த அணி களம் காண்கிறது. இந்நிலையில், ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ள விராட் கோலி, சக வீரர்களிடம் கூறியதாவது:

          

“கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தோம். அதற்காக கடந்த இரண்டு முதல் மூன்று சீசன்களாக தீவிரமாக உழைத்தோம். இந்த முறை மற்ற அணிகள் நமக்கு எதிராக கடும் சவால் அளிக்கும். அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் பங்கெடுத்துள்ள பயிற்சி சார்ந்த செஷன்களில் ஒரு நிமிடத்தை கூட நாம் வீணடிக்க கூடாது. அடுத்த இரண்டரை மாத காலத்துக்கு நாம் நமது 120 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த சீசனை முன்னிட்டு வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ், ஜோர்டான் காக்ஸ், விக்கி ஓஸ்ட்வால், சாத்விக் தேஸ்வால் ஆகியோரை கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலம் மூலம் அணியில் ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி. இதன் மூலம் அணியை மேலும் பலப்படுத்தி உள்ளதாக ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் அப்போது தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT