விளையாட்டு

செயல்​பாட்​டுக்கு வந்த கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளப் பக்​கம் முடக்​கப்​பட்ட நிலை​யில், அது மீண்​டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்​பட்​டது.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வீர​ராக இருப்​பவர் விராட் கோலி. தற்​போது அவர், சர்​வ​தேச ஒரு நாள் போட்​டி​யில் மட்​டும் விளை​யாடி வரு​கிறார். விராட் கோலிக்கு கோடிக்​கணக்​கான ரசிகர்​கள் உள்​ளனர். அவரது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்தை 27.4 கோடி ரசிகர்​கள் பின் தொடர்கின்றனர்.

          

இந்​நிலை​யில் விராட் கோலி​யின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் நேற்று முன்​தினம் இரவு திடீரென்று முடங்​கியது. அவரது இன்​ஸ்​டாகி​ராம் கணக்கை ரசிகர்​கள் அணுகிய​போது கிடைக்​க​வில்லை என்று காண்​பித்​தது. இதனால் அவரது ரசிகர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அதே​போல் விராட் கோலி​யின் சகோ​தரர் விகாஸின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​க​மும் முடக்​கப்​பட்​டிருந்​தது.இதுதொடர்​பாக புகார் அளிக்​கப்​பட்ட நிலை​யில், நேற்று

காலை 8.30 மணி​யள​வில் அவ ரது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் மீண்​டும் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. விராட் கோலி​யின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் முடங்​கியதற்கு தொழில்​நுட்​பக் கோளாறு காரணமா அல்​லது வேறு ஏ​தாவது ​காரணம்​ உள்​ள​தா என வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது.

SCROLL FOR NEXT