விக்ரம் ரத்தோர்

 
விளையாட்டு

இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் விக்ரம் ரத்தோர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக லசித் மலிங்காவை குறுகிய கால அடிப்படையில் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT