பிரனோ: செக் குடியரசின் பிரனோ நகரில் செக் குடியரசு ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் பிரிவு அரை இறுதி சுற்றில் 42-ம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 32-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆகஸ்ட் டுசூருடன் மோதினார். இதில் வேலவன் செந்தில்குமார் 11-7, 12-10, 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.