விளையாட்டு

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டி: 134 ரன்களில் சுருண்டது உத்தராகண்ட் அணி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​துக்கு எதி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் உத்​த​ராகண்ட் 134 ரன்​களுக்கு சுருண்​டது.

தமிழகம், உத்​த​ராகண்ட் அணி​களுக்கு இடையி​லான ரஞ்சி லீக் கிரிக்​கெட் போட்டி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. முதலில் விளை​யாடிய உத்​த​ராகண்ட் அணி 56.2 ஓவர்​களில் 134 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஆரவ் மகாஜன் 8, தேகா நிஷ்சல் 3, குணால் சண்​டேலா 6, லக்​சயா ராஜேஷ் ராய்​சந்​தனி 15, அவ்​னீஷ் சுதா 54, மயங்க் மிஸ்ரா 33, ஜன்​மஜய் ஜோஷி 2 ரன்​கள் சேர்த்​தனர்.

தமிழக அணி தரப்​பில் கேப்​டன் ரவிஸ்ரீநி​வாசன் சாய் கிஷோர், குர்​ஜப்​நீத் சிங் ஆகியோர் தலா 4 விக்​கெட்​களை​யும், ஜெகந்​நாதன் ஹேம்​சுதேஷன் ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர். பின்​னர் முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 27 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 85 ரன்​கள் எடுத்​துள்​ளது.

விமல் குமார் 0, நாராயண் ஜெகதீசன் 37 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். பிரதோஷ் ரஞ்​சன் பால் 37, பாபா இந்​திரஜித் 9 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர். அவ்​னீஷ் சுதா, தேவேந்​திர சிங் போரா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். 49 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று 2-ம் நாள் ஆட்​டத்தை தமிழக அணி தொடர்ந்து விளை​யாட​வுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT