விளையாட்டு

​யுடிடி 7-வது சீசன் போட்டி: பெர்னாடெட் ஸோக்ஸை ஏலம் எடுத்​தது கோவா அணி

செய்திப்பிரிவு

மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 7-வது சீசன் போட்​டிகள் வரும் ஜூலை 9-ம் தேதி கோவா​வில் தொடங்குகின்றன. இம்​முறை 7 அணி​கள் கலந்து கொண்டு விளை​யாட உள்​ளன.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான வீரர், வீராங்​க​னை​கள் ஏலம் நேற்று மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் ருமேனியா வீராங்​க​னை​யான பெர்​னாடெட் ஸோக்ஸை 40 லட்​சம் டோக்​கன்​களுக்கு டெம்போ கோவா சாலஞ்​சர்ஸ் அணி ஏலம் எடுத்​தது.

இந்​தி​யா​வின் முன்​னணி வீராங்​க​னை​யான தியா சித்​தலேவை 37.4 லட்​சம் டோக்​கன்​களுக்கு பிபிஜி புனே ஜாக்​கு​வார்ஸ் அணி வாங்​கியது. இந்​தி​யா​வின் முன்​னணி வீர​ரான மனுஷ் ஷாவை 37.2 லட்​சம் டோக்​கன்​களுக்கு யு மும்பா அணி ஏலம் எடுத்​தது. அதேவேளை​யில் மானவ் தாக்​கரை 36 லட்​சம் டோக்​கன்​களுக்​கும் ஆஸ்​திரேலி​யா​வின் யங்ஸி லியுவைவை 32 லட்​சம் டோக்​கன்​களுக்​கும் யுபி புரோமி​தி​யன்​ஸ்​ அணி வாங்​கியது.

SCROLL FOR NEXT