சல்மான் அலி ஆகா

 
விளையாட்டு

‘உஸ்மான் தாரிக் எங்களது துருப்புசீட்டு’ - பாக். கேப்டன் சல்மான் அலி ஆகா பகிர்வு | T20 WC 2026

செய்திப்பிரிவு

கொழும்பு: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா கூறியதாவது:

“எங்​கள் 15 வீரர்​களில் உஸ்​மான் தாரிக்​கும் ஒரு​வர், நாங்​கள் அவரை அப்​படித்​தான் நடத்​துகிறோம். ஊடகங்​களே அவரை பெரிதுபடுத்​துகின்றன. உஸ்​மான் தாரிக் சிறப்​பாக பந்து வீசி வரு​கிறார்.

          

கடந்த சில மாதங்​களாக அவர், மிகச் சிறப்​பாக பந்​து​வீசி வரு​கிறார். பாகிஸ்​தான் அணிக்​காக விளை​யாடு​வதற்கு முன்பு அவர், பாகிஸ்​தான் சூப்​பர் லீக் தொடரிலும் மிகச் சிறப்​பாக பந்​து​வீசி​னார். உஸ்​மான் தாரிக் எங்​களுக்கு ஒரு துருப்​புச் சீட்டு என்று கூறலாம்.

அவரது பந்​து​வீச்சு பாணி குறித்து பல்​வேறு கருத்​துகள் எழுகின்​றன. ஆனால் அவற்றை அவர், கண்​டு​கொள்​ள​வில்​லை. 2 முறை அவரது, பந்​து​வீச்சு சோதனை செய்​யப்​பட்​டுள்​ளது. ஐசிசி கூறியதை​யும், சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் பந்து வீசுவதற்கு என்ன தேவையோ அதை​யும் உஸ்​மான் தாரிக் செய்​துள்​ளார்.

உலகக் கோப்​பைகளில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக கடந்த காலங்​களில் நாங்​கள் சிறப்​பாக விளை​யாட​வில்​லை. வரலாற்றை மாற்ற முடி​யாது. அதிலிருந்து நாங்​கள் கற்​றுக்​கொண்​டுள்​ளோம். இம்​முறை சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்தி வெற்றி பெற முயற்​சிப்​போம்” என்​றார்​.

SCROLL FOR NEXT