விளையாட்டு

அராவ்ஜோ கோலால் தப்பித்தது உருகுவே அணி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

மியாமி கார்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் மியாமி கார்​டனில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்​தில் நேற்று ‘ஹெச்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்​பிய​னான உருகுவே, சவூதி அரேபியா அணி​யுடன் மோதி​யது. உருகுவே வீரர் அராவ்ஜோ அடித்த ஆபத்தான ஷாட்​டை, சவூதி அரேபி​யா​வின் கோல்​கீப்​பர் முகமது அல் ஒவைஸ் சாதுரிய​மாகத் தடுத்து நிறுத்​தி​னார்.

அதனைத் தொடர்ந்​து, ஃபெடெரிகோ வினாஸ் துல்​லிய​மாக இலக்கை நோக்​டிக தலை​யால் முட்​டிய பந்​தை​யும் அல் ஒவைஸ் அசாத்​தி​ய​மான முறை​யில் தடுத்​தார். ஆட்​டத்​தின் 41-வது நிமிடத்தில் சவூதி அரேபியா அணி முதல் கோலை அடித்​தது. கார்னரில் இருந்து உதைக்​கப்​பட்ட பந்தை பாக்ஸ் பகு​திக்​குள் நின்ற சவூதி வீரர் முகமது கன்னோ இலக்கை நோக்கி தலை​யால் முட்​டி​னார்.

இதை உரு​குவே அணி​யின் கோல் கீப்​பர் முஸ்​லெ​ரா​வால் முழு​மை​யாகத் தடுக்க முடி​யாமல் போனது. அவர், மீது பட்டு திரும்பி வந்த பந்தை அங்கு சுதா​ரிப்​பாக நின்ற அல்​-அம்ரி மின்​னல் வேகத்​தில் கோல் வலைக்​குள் திணிக்க சவூதி அரேபியா அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. ஆட்​டத்​தின் 2-வது பாதி​யில் உரு​குவே வீரர் வினாஸ் இலக்கை நோக்கி தலை​யால் முட்​டிய பந்து கோல்​கம்​பத்​துக்கு மிக அரு​கில் வெளியே சென்று ஏமாற்​றம் அளித்​தது.

தொடர்ந்​து, மனுவேல் உகார்டே நீண்ட தூரத்​திலிருந்து அடித்த வலு​வான ஷாட் சவூதி அரேபிய அணி​யின் கோல்​கீப்​பர் அல் ஒவைஸைத் தாண்​டி​னாலும், துர​திர்​ஷ்ட​வச​மாக கோல் கம்பத்தின் விளிம்​பில் பட்​டுத் தெறித்​தது. 80-வது நிமிடத்​தில் உருகுவே அணி​யின் வினாஸ் இலக்கை நோக்கி தலை​யால் முட்டிய பந்தை சவூதி அரேபிய அணி​யின் கோல்​கீப்​பர் அல் ஒவைஸால் முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் போனது.

அப்​போது அரு​கில் நின்ற மேக்ஸி அராவ்ஜோ மின்​னல் வேகத்​தில் செயல்​பட்டு பந்தை கோல் வலைக்​குள் செலுத்​தி​னார். இதனால் ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது. இதன் பின்​னர் வெற்றிக்கான கோலை அடிக்க உரு​குவே இறு​திவரை போராடியது. ஃபெடெரிகோ வல்​வெர்டே அடித்த ஆபத்​தான ஷாட்டை அல் உவைஸ் தடுத்து நிறுத்​தி​னார். முடி​வில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா​வில் முடிவடைந்​தது.

29 முறை கோல் அடிக்க முயற்சி

சவூதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்து ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியது. சவூதி அரேபியா அணி 7 முறை கோல் அடிக்க முயற்சித்த நிலையில் உருகுவே அணி 29 முறை கோல் அடிக்க முயற்சி செய்து கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே உருகுவே அணியால் கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய முடிந்தது.

SCROLL FOR NEXT