விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டனில் உன்னதி ஹூடா தோல்வி

செய்திப்பிரிவு

ஷென்சென்: சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா 10-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான கிம் கா யுனிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடியானது சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி முதல் செட்டில் 8-11என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது.

துலீப் டிராபி தொடர்: இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம்

SCROLL FOR NEXT