விளையாட்டு

உபேர் கோப்பை பாட்மிண்டன் தொடர்: சீனா​விடம் இந்திய மகளிர் அணி தோல்வி

செய்திப்பிரிவு

ஹார்​சென்ஸ்: டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் உபேர் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ‘ஏ’ இடம் பெற்​றிருந்த இந்​திய மகளிர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் சீனா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 0-5 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறியது.

முதலில் நடை​பெற்ற ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 16-21, 21-19, 19-21 என்ற செட் கணக்​கில் போராடி வாங் ஸியி-​யிடம் தோல்வி அடைந்​தார். 2-வதாக நடை​பெற்ற இரட்​டையர் பிரிவு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் பிரியா கொஞ்​செங்​பாம், ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 11-21, 8-21 என்ற செட் கணக்​கில் யு ஷெங்​ஷு, டான் நிங் ஜோடி​யிடம் வீழ்ந்​தது.

இதன் பின்​னர் நடை​பெற்ற ஒற்​றையர் பிரி​வில் இந்தியாவின் இஷா​ராணி பருவா 20-22, 13-21 என்ற செட் கணக்​கில் ஷெய் யுஃபெ​யிடம் தோல்வி அடைந்​தார். 4 வதாக நடை​பெற்ற இரட்​டையர் பிரிவு ஆட்​டத்​தில் இந்தியா​வின் தனிஷா கிரஸ்​டோ, கவிப்​பிரியா செல்​வம் ஜோடி 21-10, 12-21, 19-21 என்ற செட் கணக்​கில் லூவோ ஷுமின், ஜாங் ஷுஷியன் ஜோடி​யிடம் வீழ்ந்​தது. கடைசியாக நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்தியாவின் தேவிகா சிங் 21-19, 17-21, 10-21 என்ற செட் கணக்​கில் வென்​ஜிங்​கிடம் தோல்வி அடைந்​தார்.

இந்​திய அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 2-3 என்ற கணக்​கில் டென்​மார்க்​கிடம் தோல்வி அடைந்​திருந்​தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 4-1 என்ற கணக்​கில் உக்​ரைனை வென்​றிருந்​தது. இதன் மூலம் ஒரு புள்​ளி​யுடன் இந்​திய அணி தனது பிரி​வில் 3-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தது. லீக் சுற்​றில் முதல் 2 இடங்களை பிடித்​த சீ​னா, டென்​ ​மார்​க்​ அணி​கள்​ ​கால்​ இறுதி சுற்​றுக்​கு முன்​னேறின.

SCROLL FOR NEXT