விளையாட்டு

இந்திய-ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு

முத்தரப்பு ஒருநாள் தொடர் அணி அறிவிப்பு

வேட்டையன்

மும்பை: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய-ஏ அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில். இதில் இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. வரும் ஜூன் 9-ம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது. ஜூன் 21-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து இலங்கை உடன் இரண்டு போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 இடம்பெற்றுள்ள இந்திய அணியை திலக் வர்மா கேப்டனாக வழிநடத்துகிறார்.

அணி விவரம்: ரியான் பராக் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்குர், யுத்வீர் சிங், அன்ஷுல் காம்போஜ், அர்ஷத் கான்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு: 1

5 வயதான இளம் இந்திய பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இளையோர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர். நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் விளையாடி வருகிறார். இந்த சீசனில் 440 ரன்களை அவர் குவித்துள்ளார்.

SCROLL FOR NEXT