விளையாட்டு

டிஎன்பிஎல் டிக்கெட் விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத்​தால் நடத்​தப்​படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்​கெட் தொடரின் 10-வது சீசன் வரும் 4-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான முதற்​கட்ட போட்​டிகள் ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்​டுக்​கல், நத்தம் பகு​தி​யில் அமைந்​துள்ள என்​பிஆர் கல்​லூரி மைதானத்​தில் நடை​பெறவுள்​ளன.

இப்​போட்​டிகளுக்​கான நேரடி டிக்​கெட் விற்​பனை மையம் இன்று (1-ம் தேதி) முதல் திண்​டுக்​கல் என்​பிஆர் கல்​லூரி நுழை​வாயி​லில் தின​மும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்​படத் தொடங்​கும். மேலும், ரசிகர்​கள் District.in என்ற இணை​யதளம் மற்றும் செயலி வாயி​லாக​வும் டிக்​கெட்​டு​களைப் பெற்​றுக் கொள்ளலாம். டிக்​கெட்​டின் குறைந்​த​பட்ச விலை ரூ.200 ஆகும்​.

SCROLL FOR NEXT