திலக் வர்மா

 
விளையாட்டு

திலக் வர்மா சதத்தால் தென் மண்டலம் முன்னிலை: துலீப் டிராபி

செய்திப்பிரிவு

பெங்களூரு: துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் தென் மண்​டலம் - வடக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான போட்டி பெங்​களூரு​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வடக்கு மண்​டலம் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கம்​ரான் இக்​பால் 76 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து பேட் செய்த தென் மண்​டலம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 18 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 40 ரன்​கள் எடுத்​தது.

கேப்​டன் திலக் வர்மா 1, நாராயணன் ஜெகதீசன் 34 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். தென் மண்டல அணி நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடியது. நாராயணன் ஜெகதீசன் 36 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ரவிச்​சந்​திரன் சமரன் 27, ஹிமதேஜா 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

6-வது விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய ஸ்ரேயஸ் கோபால், திலக் வர்​மாவுடன் இணைந்து சீராக ரன்​கள் சேர்த்​தார். நிதான​மாக பேட் செய்த திலக் வர்மா 219 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் சதம் அடித்​தார். அவர், தனது முதல் பவுண்​டரியை 154-வது பந்​தில்​தான் அடித்​திருந்​தார். ஸ்ரேயஸ் கோபால் 169 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் எடுத்த நிலை​யில் அர்​ஷ்தீப் சிங் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இந்த ஜோடி 175 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து களமிறங்​கிய தனய் தியாக​ராஜன் 6, வித்​வத் கவேரப்பா 0, நிதீஷ் 0 ரன்​களில் வெளி​யேறினர். 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தென் மண்டல அணி 94 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 285 ரன்​கள் எடுத்​தது. திலக் வர்மா 106, கவுரி சாய்​தேஜா ரன் ஏதும் எடுக்​காமல் களத்​தில் இருந்​தனர்.

குர்​னூர் பிரார் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். அர்​ஷ்தீப் சிங், அன்​ஷுல் கம்​போஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். கைவசம் ஒரு விக்​கெட் இருக்க 90 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள தென் மண்டல அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.

SCROLL FOR NEXT