சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.
இந்தப் போட்டி வரும் 26-ம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல் மே 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. டிக்கெட்களை www.chennaisuperkings.com, www.district.in ஆகிய இணையதளங்களில் ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.