விளையாட்டு

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகள் ஜனவரியில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறவுள்ளது.

ஆடவர் பிரிவில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய பிராந்தியங்களிலிருந்து, இந்த ஆண்டு டிச.31-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும்.

மகளிர் பிரிவில் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டி அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுவிட்டன. வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பின்னர் தரவரிசை அடிப்படையில் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதும் அணிகள் தேர்வு செய்யப்படும். 2027 ஜனவரி அல்லது பிப்ரவரியில் தகுதிச் சுற்றில் மோதும் அணிகள், அட்டவணையை ஐசிசி அறிவிக்க உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT