நியூயார்க்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு முதல் தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறியுள்ளன என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா உட்பட 16 அணிகள் வெளியேறின. இந்த சுற்றில் மூன்று ஆட்டங்கள் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இப்போது தொடரின் சிறந்த 16 அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் விளையாடுகின்றன. மொத்தம் 8 ஆட்டங்கள். இதில் வெற்றி பெறுகின்ற அணி காலிறுதிக்கு முன்னேறும், தோல்வி பெறும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
‘ரவுண்ட் ஆப் 16’ ஆட்டங்களின் விவரம்
>> கனடா vs மொராக்கோ - ஜூலை 4 - இரவு 10.30
>> பராகுவே vs பிரான்ஸ் - ஜூலை 5 - அதிகாலை 2.30
>> அமெரிக்கா vs பெல்ஜியம் - ஜூலை 7 - அதிகாலை 5.30
>> போர்ச்சுகல் vs ஸ்பெயின் - ஜூலை 7 - அதிகாலை 12.30
>> பிரேசில் vs நார்வே - ஜூலை 6 - அதிகாலை 1.30
>> மெக்சிகோ vs இங்கிலாந்து - ஜூலை 6 - அதிகாலை 5.30
>> சுவிட்சர்லாந்து vs கொலம்பியா - ஜூலை 8 - அதிகாலை 1.30
>> அர்ஜெண்டினா vs எகிப்து - ஜூலை 7 - இரவு 9.30