விளையாட்டு

இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

சண்டிகர்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்தியாவில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் திரு​வனந்​த​புரம் மற்​றும் குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற முதல் இரு போட்​டிகளி​லும் தலா 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி தொடரை 2-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது.

இதில் குவாஹாட்டி போட்​டி​யில் 406 ரன்​கள் இலக்கை விரட்டி இந்​திய அணி சாதனை படைத்​திருந்​தது. அந்த ஆட்​டத்​தில் இரட்டை சதம் விளாசிய ஷுப்​மன் கில் மற்​றும் சதம் விளாசிய ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும்.

இந்​திய அணி தொடரை முழு​மை​யாக கைப்​பற்​றும் முனைப்​பில் உள்ள நிலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி ஆறு​தல் வெற்​றியை பெற முயற்சி செய்​யக்​கூடும்​.

SCROLL FOR NEXT