விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 2 மணிக்கு திரு​வனந்​த​புரத்​தில் உள்ள கிரீன்ஃபீல்டு சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெறுகிறது.

ஷாய் ஹோப் தலை​மையி​லான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சொந்த மண்​ணில் நியூஸிலாந்து மற்​றும் இலங்கை அணி​களுக்கு எதி​ரான தொடர்​களை இழந்த நிலை​யில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியை அணுகு​கிறது.

இந்​திய அணி ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. உலகக் கோப்​பையை கருத்​தில் கொண்டு இந்​தத் தொடர் ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமைந்​துள்​ளது. இதில் விராட் கோலி 15 ஆயிரம் ரன்​கள் மைல்கல் சாதனையை எட்​டு​வதற்கு இன்​னும் 51 ரன்​கள் தேவை​யாக உள்​ளது. இதை அவர், இன்​றைய ஆட்​டத்​தில் சேர்க்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT