விளையாட்டு

நியூஸி. உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

வேட்டையன்

சென்னை: நியூஸிலாந்து அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயர் அணிக்குள் இந்த தொடர் மூலம் திரும்பி உள்ளார்.

நியூஸிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் மொத்தம் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியில் முகமது சிராஜ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க உடனான ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அணியில் உள்ளனர். அனுபவ வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

SCROLL FOR NEXT