இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

 
விளையாட்டு

ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

வேட்டையன்

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா களம் காண்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைக்கும்.

மேலும், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட அணி, சொந்த மண்ணில் பட்டம் வென்ற அணி உள்ளிட்ட சாதனைகளை இந்தியா படைக்க வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் இதுநாள் வரையிலான செயல்பாடு எப்படி என்பதை பார்ப்போம்.

          

ஐசிசி தொடர்களை பொறுத்தவரையில் இந்திய அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் 1983, 2011 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2002, 2013, 2025 மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் 2007, 2024-ல் இந்தியா பட்டம் வென்றுள்ளது. இப்போது ஐசிசி நடத்தும் தொடரில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணி இன்று களமாடுகிறது.

இந்தியா கோப்பை வெல்லும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அசாத்திய ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். அதையே இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி தொடர்களில் இந்தியா இதுவரை…

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1975 | குரூப் சுற்று

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1979 | குரூப் சுற்று

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1983 | சாம்பியன்

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1987 | அரையிறுதி

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1992 | குரூப் சுற்று

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1996 | அரையிறுதி

  • இண்டர்நேஷனல் கோப்பை - 1998 | அரையிறுதி

  • ஒருநாள் உலகக் கோப்பை - 1999 | சூப்பர் 6 சுற்று

  • ஐசிசி நாக்அவுட் - 2000 | இரண்டாம் இடம் (ரன்னர் அப்)

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2002 | சாம்பியன்

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2003 | இரண்டாம் இடம்

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2004 | குரூப் சுற்று

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2006 | குரூப் சுற்று

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2007 | குரூப் சுற்று

  • டி20 உலகக் கோப்பை - 2007 | சாம்பியன்

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2009 | குரூப் சுற்று

  • டி20 உலகக் கோப்பை - 2009 | சூப்பர் 8 சுற்று

  • டி20 உலகக் கோப்பை - 2010 | சூப்பர் 8 சுற்று

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2011 | சாம்பியன்

  • டி20 உலகக் கோப்பை - 2012 | சூப்பர் 8 சுற்று

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2013 | சாம்பியன்

  • டி20 உலகக் கோப்பை - 2014 | இரண்டாம் இடம்

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2015 | அரையிறுதி

  • டி20 உலகக் கோப்பை - 2016 | அரையிறுதி

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2017 | இரண்டாம் இடம்

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2019 | அரையிறுதி

  • டி20 உலகக் கோப்பை - 2021 | சூப்பர் 12

  • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 2021 | இரண்டாம் இடம்

  • டி20 உலகக் கோப்பை - 2022 | அரையிறுதி

  • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 2023 | இரண்டாம் இடம்

  • ஒருநாள் உலகக் கோப்பை - 2023 | இரண்டாம் இடம்

  • டி20 உலகக் கோப்பை - 2024 | சாம்பியன்

  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2025 | சாம்பியன்

SCROLL FOR NEXT