சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங்

 
விளையாட்டு

“உஸ்மான் தாரிக் சுழலை இந்திய அணியால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்” - கங்குலி, ஹர்பஜன் | T20 WC 2026

வேட்டையன்

மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மாலை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்டம் இத்தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் சமாளித்து, சிறப்பாக ஆடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

          

சவுரவ் கங்குலி: “பாகிஸ்தான் அணியின் உஸ்மான் தாரிக்கின் சுழற்பந்து வீச்சில் எதுவும் வித்தியாசமாக இல்லை. நிறுத்தம் கொடுத்து வீசுகிறார். அவர் ஆப்-ஸ்பின்னர் மட்டுமே. அவருக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே செயல்படும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்: “பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களில் இருந்து வித்தியாசமானவர். அவரிடம் வேரியேஷன் உள்ளது. ஐஎல்டி20 தொடரில் சிறப்பாக விளையாடினார். யார் வேண்டுமானாலும் பந்தை நிறுத்தி வீசலாம். ஆனால், வேரியேஷன் இருக்க வேண்டும். பெரிய மைதானத்தில், நிதானமான ஆடுகளத்தில் அவரை எதிர்கொள்வது சற்று சவால்.

இதுவரை எதிர்கொள்ளாத ஒருவரை சற்று கவனத்துடன் கையாள்வது அவசியம். இந்திய அணியால் அவரை சமாளிக்க முடியும். அவருக்கு நம் வீரர்கள் பெரிய அளவில் விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அபிஷேக் சர்மா சுழற்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். முதல் பந்தில் இருந்து அடித்து ஆடுபவர். பல்வேறு ஷாட்களை நேர்த்தியாக ஆடும் வீரர். அவர் ஒரு மேட்ச் வின்னர்” என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT