விளையாட்டு

அபிஷேக் சர்மா, திலக் வர்மா அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

செய்திப்பிரிவு

நிஷின்: ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் நேற்று நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, பாகிஸ்​தானுடன் மோதி​யது. நிஷின் நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 211 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 28 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​கள் விளாசி​னார். அவரது அதிரடி​யால் பவர்​பிளே​வில் 81 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. மற்​றொரு தொடக்க வீர​ரான வைபவ் சூர்​ய​வன்ஷி 15 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். சஞ்சு சாம்​சன் 2, கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 21, இஷான் கிஷன் 20 ரன்​களில் வெளி​யேறினர்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்​டையை சுழற்​றிய திலக் வர்மா 22 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​கள் விளாசி​னார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய ஷிவம் துபே 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் சேர்த்​தார். இந்த ஜோடி கடைசி 5 ஓவர்​களில் 62 ரன்​களை வேட்​டை​யாடியது.

சுழற்​பந்து வீச்​சாளர்​களான சுஃப்​யான் மோகிம் வீசிய 18-வது ஓவரில் 18 ரன்​களும், சைம் அயூப் வீசிய 19-வது ஓவரில் 23 ரன்​களும், வேகப்​பந்து வீச்​சாளர் அஹ்மத் டேனியல் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்​களும் விளாசப்​பட்​டன. இந்​திய அணி ஒட்​டுமொத்​த​மாக 15 சிக்​ஸர்​களை விளாசி​யது.

பாகிஸ்​தான் அணி தரப்​பில் அஹ்மத் டானியல், அராபத் மின்​ஹாஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 212 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி​யால் 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 192 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது.

அதி​கபட்​ச​மாக ஹசன் நவாஷ் 51 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 96 ரன்​கள் விளாசி​னார். பாகிஸ்​தான் அணி​யின் வெற்​றிக்கு கடைசி 3 ஓவர்​களில் 52 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. 18-வது ஓவரை வீசிய வாஷிங்​டன் சுந்​தர் ஒரு விக்​கெட்டை கைப்​பற்​றியதுடன் 8 ரன்​களை மட்டுமே விட்​டுக்​கொடுத்​தார். இது பெரிய திருப்பு முனையை ஏற்​படுத்​தி​யது.

பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்​களை விட்​டுக்​கொடுத்​தார். ஷிவம் துபே வீசிய கடைசி ஓவரில் 33 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் 13 ரன்​கள் மட்​டுமே பாகிஸ்​தான் அணி​யால் எடுக்க முடிந்​தது. இதனால் 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக தங்​கப்​ பதக்​கம்​ வென்​றது.

SCROLL FOR NEXT