விளையாட்டு

ரஞ்சி கிரிக்​கெட்டில் தமிழக அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு - ரயில்​வேஸ் அணிகள் இடை​யி​லான ஆட்​டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ரயில்​வேஸ் அணி 53.3 ஓவர்​களில் 184 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சுபைர் அலி 75 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 25 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 71 ரன்​கள் சேர்த்தது. பாபா இந்​திரஜித் 19, ஆந்த்ரே சித்​தார்த் 8 ரன்​களில் ஆட்ட மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 63.1 ஓவர்​களில் 165 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

பாபா இந்​திரஜித் 167 பந்​துகளில், ஒரு பவுண்​டரியுடன் 59 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார். ஆந்த்ரே சித்​தார்த் 8, ஆதிஷ் 0, சோனு யாதவ் 0, கேப்​டன் சாய் கிஷோர் 14, அஜித் ராம் 7, ஜெகநாதன் ஹெம்​சுதேஷன் 26 ரன்​களில் நடையை கட்​டினர். ரயில்​வேஸ் அணி தரப்​பில் ராஜ் சவுத்ரி 5, தவுஃபிக் உத்​தின் மொண்​டல் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

19 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ரயில்​வேஸ் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 51 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 107 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக சஹாப் யுவ​ராஜ் சிங் 42, ரவி சிங் 19, தவுஃபிக் உத்​தின் மொண்​டல் 11, ஜூபைர் அலி 10 ரன்​கள் சேர்த்​தனர்.

ரத்​யும்ன் பரிக் 2, ஹிமான்ஷு சங்க்​வான் ஒரு ரன்​னுடன் களத்​தில் இருந்​தனர். தமிழக அணி தரப்​பில் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் ஹெம்​சுதேஷன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 126 ரன்​கள் முன்னிலை பெற்​றுள்ள ரயில்​வேஸ் அணி கைவசம் ஒரு விக்​கெட் இருக்க இன்று 3-வது நாள் ஆட்​டத்தை எதிர்​கொள்​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT