விளையாட்டு

டேபிள் டென்​னிஸில் தமிழக அணி சாம்​பியன்

செய்திப்பிரிவு

டேராடூன்: மாநிலங்​களுக்கு இடையி​லான யுடிடி ஜூனியர் மற்​றும் யூத் தேசிய டேபிள் டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்​டிகள் டேராடூனில் நடை​பெற்று வருகிறது. இதில் யு-19 அணி​கள் பிரி​வில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் தமிழ்​நாடு 3-1 என்ற கணக்​கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

முதல் ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி​யின் பால​முரு​கன் 11-9, 13-11, 8-11, 6-11, 9-11 என்ற செட் கணக்​கில் மகா​ராஷ்டி​ரா​வின் குஷால் சோப்​டா​விடம் தோல்வி அடைந்​தார். இதைத் தொடர்ந்து தமிழ்​நாட்​டின் பி.பி.அபிநந்த் 11-5, 11-3, 7-11, 11-6 என்ற செட் கணக்​கில் நீல் முல்​யேவை தோற்​கடித்​தார். தொடர்ந்து தமிழ்​நாட்​டின் எஸ்​.கே.மேகன் 11-4, 12-10, 11-7 என்ற செட் கணக்​கல் இஷான் கந்​தேகரை வீழ்த்​தி​னார். இதன் பின்​னர் மாற்று ஒற்​றையர் ஆட்​டத்​தில் பி.பி.அபிநந்த் 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்​கில் குஷால் சோப்​டாவை தோற்​கடித்​தார்.

SCROLL FOR NEXT